சென்னை: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தை திசை திருப்ப முயலும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறையை வலியுறுத்தி உள்ளர்.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அசம்பாவிதங்கள், மக்களிடையே காவல்துறைமீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்.பி ஆ.ராசாவின் இந்து துவேசம் காரணமாக தொடங்கிய பதற்றம், அவரை எதிர்த்து பாஜகவினர் பேசிய பேச்சு, அதைத்தொடர்ந்து, காவல்துறையினரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால், பாஜக  மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது, இதற்கிடையில் பி.எஃப்.ஐ அமைப்பை குறிவைத்து என்.ஐ.ஏ நடத்திய ரெய்டு போன்றவற்றால் கொங்கு மண்டலம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து, பிஎப்ஐ அமைப்பினர், பாஜக,  இந்து முன்னணியை குறிவைத்து பெட்ரோல் குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால், கோவையில் பதற்றம் நிலவி வருகிறது.

பெட்ரோல் குண்டுகளை வீசியது தொடர்பாக எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளனர். ஆனால், சீமான், திருமாவளவன் உள்பட எதிர்க்கட்சியினர், பாஜகவினரும், இந்து அமைப்பினரும், அவர்களாகவே பெட்ரோல் குண்டுகளை வீசி பிரச்சினையை உருவாக்குவதாக, பிரச்சினையை திசைதிரும்பும் வகையில் பேசி வருகின்றன.

இந்த நிலையில், இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்திதத பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள், தேச விரோதிகள், வன்முறைவாதிகள் தைரியமாக, துணிச்சலாக இருப்பதற்கு காரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்ற தீய சக்திகள் தான்.  இவர்களில் அரசியலில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள்.

கோவையில் போலீஸ் நிலையத்துக்கு எதிரே எஸ்.டி.பி.ஐ, பி.எப்.ஐ போராட்டம் நடத்தும் போது அவர்களுடன்  விடுதலை சிறுத்தைகளும் இணைந்து போராடுகின்றனர்.  விடுதலை சிறுத்தைகளுக்கும், எஸ்.டி.பி.ஐ, பி.எப்.ஐக்கும் வித்தியாசம் இல்லை. எனவே, தமிழக அரசு அரசியல் ரீதியாக உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர்களை வைத்து கடலூரில் கூட்டம் போட்டவர் தான் சீமான். நாட்டுக்கு விரோதமானவர் சீமான். இவர் உள்பட  மக்களிடையே உண்மைக்கு புறம்பான பொய் செய்திகளை பரப்பும் திருமாவளவனுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் குண்டுவீச்சு காரணமாக எஸ்டிபிஐ கட்சியினர் 5 பேர் உள்பட 8 பேர் கைது! தேசியபாதுகாப்பு சட்டம் பாயுமா?

பொள்ளாச்சி பெட்ரோல் குண்டுவீச்சில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த 3 பேர் கைது..