கோவை: கோவை, சேலம், ஈரோடு உள்பட பல இடங்களில் பெட்ரோல் குண்டுவீசிய எஸ்டிபிஐ-யினர் 5 பேர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 350 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது என காவல்துறையினர் கூறி வருகின்றனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசியபாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட வருகிறது.

கடந்த சில நாட்களாக, கோவை, சேலம், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, நெல்லை, திண்டுக்கல், ராமநாதபுரம்  உள்பட பல இடங்களில் எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ கட்சியை சேர்ந்தவர்கள், பாஜக, இந்துமுன்னணி உள்பட பலரது வீடுகள், கட்சி அலுவலகங்கள், கடைகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இனதால், பல இடங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. கொங்கு மண்டலத்தில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

திமுக எம்.பி.ராஜாவின் இந்து விரோத பேச்சு, என்ஐஏ சோதனை போன்றவற்றால் பல இடங்களில் தேவையான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியானது.  தொடர்ந்து, கோவை, சேலம், ஈரோடு, பொள்ளாச்சி, நெல்லை என பல இடங்களில் பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் பெட்ரோல் குண்டுகளை இந்து அமைப்பினர் வீடுகளிலும், கடைகளிலும், வாகனங்களில் வீசி தாக்குதல்  நடத்தினார். இது மக்களிடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

இதையடுத்து,  கோவையில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில்  ஆலோசனை நடைபெற்றது. கோவை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்கணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். அதுபோல மதுரையிலும் ஆலோசனை நடைபெற்றது.  இதைடுத்து, செய்தியளார்களிடம் பேசிய மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் ,  பெட்ரோல் குண்டு வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்கள். தென் மாவட்டத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் வினியோகம் செய்ய வேண்டாம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுத்தப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான நபர்களின் வீடுகள், அலுவலகங்கள், தொழில் செய்யும் இடங்களில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி. தலைமையில் இரவு ரோந்து பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையில், சேலத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் குண்டு வீசிய, எஸ்டிபிஐ அமைப்பைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.  எஸ்டிபிஐ அமைப்பினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுசம்பந்தமாக எஸ்டிபிஐ சேலம் மாவட்ட தலைவர் சையத் அலி (42), 34-வது வார்டு கிளை தலைவர் காதர் உசேன் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தீ வைத்தல், புகழுக்கு களங்கம் விளைவித்தல், மத நல்லிணக்கத்துக்கு எதிராகச் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷெரீப் பாஷா (40), முகமது ரபி (42), முகமது இஸ்மாயில் (30), முகமது ஹாரிஸ் (27), காஜா உசேன் (37) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

ஈரோட்டில் நடந்த குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக எஸ்டிபிஐ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், கட்சி அலுவலகங்கள், பாஜக, இந்து அமைப்புகளின் தலைவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோன்று, கோவையில் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது மற்றும் இந்து முன்னணி பிரமுகரின் காருக்கு தீ வைத்தது தொடர்பாக, எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

குனியமுத்தூர் சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்த பரத், முத்துசாமி சேர்வை வீதியைச் சேர்ந்த தியாகு (35) ஆகியோரது வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த, மதுக்கரை அறிவொளி நகர் ஜேசுராஜ்(33), குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த இலியாஸ் (38) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

கோவையில் நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் தொடர்பாக இதுவரை 350 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். குற்றவாளிகளை கண்டறிய 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநகரம் முழுவதும் 400 சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டுவருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக இதுவரை எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 8 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்மீது சாதாரண வழக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ள நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு கூறியபடி,  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.