தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இணைந்த நடன இயக்குனர் ஜானி….!

Must read

தனுஷ் நடிப்பில் மித்ரன் கே.ஜவஹர் இயக்கும் படம் திருச்சிற்றம்பலம். நான்காவது முறையாக தனுஷ் – மித்ரன் கூட்டணி இணைகிறது. இப்படத்திற்கு தனுஷ்தான் கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே நித்யா மேனன் ஒரு கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர் .

இந்த படத்தில் ஒரு பாடலை இயக்கியுள்ளதாக பிரபல நடன இயக்குனரான ஜானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.Beast படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திலும் ஜானி இணைந்துள்ளார்.

https://www.instagram.com/p/CT_spjCNhTc/

More articles

Latest article