டாக்டர் படத்தை முடித்த சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து வருகிறார். டான் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். உடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கவுதம் மேனன் – சிவகார்த்திகேயன் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.