விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் மலையாள நடிகையான பூர்ணா.

‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் நன்றாக நடனமாடிய ஒரு இளைஞருக்கு முத்தம் கொடுத்த பூர்ணா, அவரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

ஒரு நடுவர் செய்யும் வேலையா இது என்று நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.