கனவாகிப் போன கச்சத்தீவு!
நெட்டிசன்:
கட்டுரையாளர்: கே. எஸ். இராதாகிருஷ்ணன், அரசியலாளர் முகநூல் பதிவு…
கச்சத்தீவு குறித்து பிரதமர் மோடியும், வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கரும் கடந்த இரண்டு நாட்களாக இது குறித்து கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். கச்சத்தீவு, காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு, பாலாறு போன்ற பிரச்சினைகள் வருடத்துக்கு ஒரு தடவை தைப் பொங்கல், தீபாவளி போல இந்து பிரச்சினைகளும் வருடத்துக்கு ஒரு தடவை பேசிவிட்டு கடந்து போகின்றன.
அமைச்சர் ஜெய்சங்கர் பேசியவாறு அன்றைய வெளி விவகார செயலாளர் கேவல்சிங் 1973 அக்டோபர்லேயே இது குறித்து வெளிப்படுத்தி உள்ளார். 1974-ல் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கலைஞரோடுஇவர் விவாதித்ததும் உண்டு. உடன் தலைமை செயலாளர் சபாநாயகம், தமிழக உள்துறை செயலாளர் எஸ். பி அம்புரோஸும் உடன் இருந்தனர் என்பது உண்மைதான். அமைச்சர் ஜெய்சங்கர் அன்றைய முதல்வர் கலைஞரிடம் கச்சத்தீவைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது என்றும் கூறி உள்ளார்.
அன்றைய மத்திய வெளி விவகார அமைச்சர் சுவரன்சிங் இது குறித்த தமிழக அரசுக்கு கடிதங்கள் எழுதியதாக செய்திகள் வந்தன. இவை எல்லாம் மத்திய மாநில வெளி வாரா இராஜங்க விவகாரங்களையே இருந்தன.
முதல்வர் கலைஞர் அன்றைக்கு மதுரை, திருச்சி, தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பேசும்போது தமிழக முதல்வருக்குத் தெரியாமல் கச்சத்தீவு வழங்கப்பட்டது என்றும் இதுகுறித்து தி.மு.க-வினர் கண்டன கூட்டங்கள் நடத்தவேண்டும் என்றும் அறிவிப்பை செய்தனர். அனைத்துக் கட்சி கூட்டமும் முதல்வர் கலைஞர்நடத்தினார். அப்போது எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் இருந்து பிரிந்த நேரம். அவர் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க தலைமை கழக செயலாளர் அரங்க நாயகம் கலந்துகொண்டு வெளிநடப்பு செய்தார். எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்பநாடார் ம.பொ.சி. சமத், கம்யூனிஸ்ட் இயக்கங்கள், சுதந்திரா, பார்வோடு பிளாக்என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். சட்டமன்றத்திலும் முதல்வர் கலைஞர் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கக்கூடாது என்று தீர்மானத்தை முன்மொழிந்தார். இவை எல்லாம் நடந்தைவகள்.
டெல்லியில் நேரு காலத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அனந்த நம்பியார் மற்றும் புதுக்கோட்டை வல்லத்அரசு நாடளுமன்றத்தில் எழுப்பியபோது தனக்கு இதுபற்றி எந்த விதமான தகவல் இல்லையென்றும் வெறும் மண் பரப்புதான் கச்சத்தீவு என்றார்.
1960-களில் செட்டால் வாத் டாக்டர் கிருஷ்ணாராவ் போன்றவர்கள் எல்லாம் மத்திய அரசுக்கு கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கக்கூடாது என்று சட்டபூர்வமான ஆலோசனைகள் வழங்கினார்.
நேரு மறைவுக்குபின் சாஸ்திரி காலத்தில் மத்திய அரசு ஒரு குழு அமைத்து இதை குறித்து விவாதிக்க கொழும்புக்கு அனுப்பினார். அதில் தமிழக அமைச்சர் புதுக்கோட்டை ராமையாவும் உறுப்பினராக இருந்தார். அன்றைக்கு இந்திரா காந்தி காலத்தில் இந்து மகா சமுத்திரம் சிக்கல்கள், அமெரிக்க டீக்கோகர்சியா, இலங்கையில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தை குத்தகைக்கு பெறுவது என்ற நிலையில் கச்சத்தீவை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சகத்தின் கடிதங்களை கொண்டே சர்வதேச சட்டத்திற்கு புறம்பாக 1974-ல் வழங்கப்பட்டது.
ஒப்புக்கு சப்பாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் சுவரன்சிங் அறிக்கை தாக்கல் செய்து பேசிவிட்டு இலங்கைக்கு வழங்கி விட்டனர். அப்போது தி.மு.க உறுப்பினர் நாஞ்சில் மனோகரன், இரா. செழியன், மூக்கையா தேவர், முகமது செரிப் (பெரியகுளம்), எம்.கல்யாண சுந்தரம் போன்ற தமிழ்நாடு எம்.பி-க்கள் வாஜ்பாய், லாக்கப்பா போன்றவர் இது குறித்து கண்டனங்கள் தெரிவித்தனர்.
இது குறித்து இரண்டாவது ஒப்பந்தம் 1976 மார்ச்-ல், அமைச்சர் ஒய்.பி. சவான் இது குறித்து பேசியது உண்டு. தமிழ்நாட்டில் அன்றைக்கு இருந்து சோசலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர், ஈ.ரோடு நல்லசிவன்-வும் கடுமையாக எதிர்த்தார்.
ஜனா கிருஷ்ணமூர்த்தி (பா.ஜ.க) இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு, நெடுமாறனும் நானும் இதை குறித்து கையில் வைத்திருந்த தரவுகளை எல்லாம் அவருக்குக் கொடுத்தோம். வாஜ்பாய் இது குறித்து வழக்கு தொடுக்க சொன்னார். அன்றைக்கு ஸ்தாபன காங்கிரஸ் சுதந்திரா, கம்யூனிஸ்ட் கட்சிகள், அப்துல் சமத் முஸ்லீம் லீக் பார்வர்டு பிளாக் என்ற கட்சிகள் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அன்றைக்கு இந்திரா காங்கிரஸ் அதன் தலைவர் ராமையாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் பக்தவசலமும் சி. சுப்ரமணியமும் இலங்கைக்கு கச்சத்தீவை கொடுப்பதற்க்கு ஆதரவாக இருந்தனர். முதல் ஒப்பந்தத்தில் மீன்பிடி உரிமை தமிழக மீனவர்கள் கச்சத்தீவு வரை செல்லக்கூடிய வசதிகள் எல்லாம் இரண்டாவது ஒப்பந்தத்தில் அகற்றப்பட்டது ஒரு ஏமாற்றுத்தனமான வேலை.
மத்திய அமைச்சர் இருபது ஆண்டுகளில் 6184 மீனவர்கள் கைது செய்யபட்டார்கள் என்றும் 1175 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது என்று சொல்லியுள்ளார். இதில் துப்பாக்கிசூட்டில் மீனவர்களின் மரணத்தை சொல்லவில்லை. இதை 1963 முதல் கணக்கில் கொள்ள வேண்டும்
பேச்சுவார்த்தை, சர்வதேச நீதிமன்ற வழக்கு தொடுத்தல் என்பது மட்டுமல்லாமல், சீனா – அமெரிக்க ஆதிக்கத்தைமனதில் கொண்டு கச்சத்தீவை மீட்க இந்தியா போரும் தொடுக்கலாம். ராஜாங்க புவி அரசியல் ரீதியாக இது பிழையும் அல்ல. இதற்கு முன் மாதிரி வழக்குகள் ஹேக்கில் சர்வேதேச நீதிமன்றத்தில் நடந்து தீர்ப்புகள் உள்ளன.
இந்திய மீனவர்கள் பாதிப்பை குறித்து 1964-ல் இருந்து பார்த்தால் இந்த கணக்கில் இரண்டு மடங்கு இருக்கும். இப்படியான கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் என்று சொல்ல தரவுகள் பல உள்ளன. என்ன சொல்ல நியாயங்கள் நிராயுபானியாக இருக்கின்றன. பிரதமர் மோடியும் வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கரும் கூறியது மெய்யானது.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துயரங்களுக்கு ஆளாவது தினமும் செய்திகளார் ஏடுகளில் வந்தவண்ணம் இருக்கின்றன. பல முறை மீனவர்கள் தாக்கப்பட் வாட்டியுள்ளது
கலைஞர் ஆட்சியில் 22.6.1974 மற்றும் அவசர நிலை காலத்தில் 23.1.1976 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர்களின் நலன்களைச் சிறிதும் சிந்திக்காமல் தாரை வார்த்துக் கொடுத்ததாகும். இதனால் பல சிக்கல்கள்ஏற்பட்டன.
115 முறைக்கும் மேல் இலங்கைக் கடற்படையின்தாக்குதலுக்கு 300 தமிழக மீனவர்கள் பலியாகி இருக்கின்றனர்; பல படகுகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் அந்தோணியார் கோவில் திருவிழாவுக்குச் செல்லும் உரிமை கூட தமிழக மீனவாகளுக்கு மறுக்கப்படுகிறது இதனால் திருவிழாக்கள் பல சமயம் நிறுத்தப்படம் உள்ளன இதற்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால் கச்சத் தீவை இலங்கையிடமிருந்து இந்தியா மீட்க வேண்டும்.
கச்சத் தீவு எனபது பசுமை நிறம் வளத்தைக் கொண்டதால் பச்சைத் தீவு என்று வழங்கப்பட்டு கச்சன் கச்சம் என்ற ஆமைகள் அதிகமாக இத்தீவில் இருந்தகாரணாத்தினால் ‘கச்சத் தீவு’ எனப் பெயர் பெற்றது.
ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் அப்பாவி மீனவர்கள் சில சமயம் தெரியாமல் இந்திய எல்லையைத் தாண்டினால் ஈவு இரக்கமின்றிக கடுமையாகத்தண்டிக்கப்படுகின்றனர். இந்த மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டினாலும் எவ்விதத் தீங்கும்விளைவிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் இருந்தும். திட்டமிட்டு இலங்கை அரச கொடுமைப் படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலைக்குக் காரணம் ஆண்டாண்டு காலமாகக்கச்சத் தீவிலிருந்து மீன் பிடிக்கும் உரிமை மீன் பிடி வலைகள் உலர்த்தும் உரிமையாகக் குறைக்கப்பட்டது இலங்கை அரசுடன் மத்திய அரசு ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையும் தான் இதற்குக் காரணம்! இந்த உடன்படிக்கையின்படி தங்களின் மீன் பிடி வலையைக் கூட உலர்த்தச் செல்ல முடியாத சூழ்நிலை இன்றைக்கும் இருக்கிறது.
இலங்கை அரசின் கடற்படையினர் உடன்படிக்கையின்படி நடக்க மறுப்பதால் தமிழக மீனவர்கள் சந்திக்கும் துயரங்கள் அளவிடற்கரியன் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத தீவின் அருகில் செல்லும் பொழுது துப்பாக்கிக் குண்டுக்குஇரையாகி மடிகின்றனர்; அல்லது கைதிகளாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர் இந்தப்பிரச்சனை பல்வேறு சமயங்களில் இந்திய நாடாளுமன்றத்திலும் தமிழக சட்டமன்றத்திலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் மேடைகளிலும் பேசப்படுவதோடு, கச்சத் தீவை இந்தியா திரும்பப் பெறவேண்டும் என்ற வாதங்களையும் எடுத்து வைக்கின்றனர்.
கடந்த 3.10.1991-இல் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழக சட்டமன்றத்தில், கச்சதீவைத் திரும்பபெற வேண்டும் என்ற தீரமான ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிவைத்தது அந்தத் தீர்மானம் பின்வருமாறு.
“தொன்றுதொட்டு தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடற்கரைகளில் வாழ்ந்து வந்த தமிழ்நாட்டு மீனவர்கள்இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடலில் குறிப்பாக கச்சத் தீவின் அருகில் மீன் பிடித்து அன்றாட ஜீவனத்தை நடத்தி வந்ததும், வருவதும்வரலாற்று உண்மையாகும். 1974 மற்றும் 1976-இல் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்கள், இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்கிற அடிப்படையில்தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத் தீவுக்கு அருகிலுள்ள கடலில் தொடர்ந்து மீன்பிடித்துத்தங்களுடைய ஜீவனத்தை நடத்த முற்பட்டனர்.
ஆனால், இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு மாறாக, இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் தங்களுடைய வழக்கப்படி கடலில் மீன் பிடிக்க முயலும் பொழுதெல்லாம் அவர்களைத் தாக்கியும், துன்புறுத்தியும், வலைகளை அறுத்தும், விசைப் படகுகளைக் கைப்பற்றியும். படகுகளை மூழ்கடித்தும் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர். இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்ச்சிகளைப் பற்றியசெய்திகளை அவ்வப்பொழுது தமிழ்நாடு மய்ய அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
அண்மையில் இலங்கைக் கடற்படையினா தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளனர் தாக்குதலின் உச்சகட்டமாக தமிழக மீனவாகள மீதுதுப்பாக்கிப் பிரயோகம் செய்து, மீனவர்களைக் காயப்படுத்தியுள்ளனர். கச்சத் தீவின் அருகில் இவர்கள் மீன் பிடித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இக்கொடுமைகள் யாவும் நடந்துள்ளன.
1983-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு ஆகஸ்டுமாதம் முடிய இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய நிகழ்ச்சிகள் 236 ஆகும். 303 படகுகள் தாக்கப்பட்டிருக்கின்றன. 486 மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 51 படகுகள் நாசமாக்கப்பட்டுவிட்டன. 135 மீனவர்கள் தாக்குதலுக்கு உட்பட்டு காயம் அடைந்துள்ளனர் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணம் அடைந்துள்ளனர் 57 மீனவர்கள் துப்பாக்கிக் சூட்டினால் காயம் அடைந்துள்ளனர். இலங்கைக் கடற்படை 65 மீனவர்களின் விசைப் படகுகளைக் கைப்பற்றியும், 205 மீனவர்களைக் கைது செய்தும் உள்ளனர் குறிப்பாக இவ்வாண்டு இந்த நிகழ்ச்சியின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது ஒருவிதக் காரணமும் இல்லாமல், இலங்கைக் கடற்படையினர் இப்படித் தாக்குதல் நடத்தித் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அவர்களுக்குப் பலவித இன்னல்களைத் தொடர்ந்து செய்து வருவதைத் தமிழ்நாடு சட்டப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது இந்தக் கண்டனத்தை மய்ய அரசின் மூலமாக இலங்கை அரசுக்குத் தெரிவிக்க விரும்புகிறது.
இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட இந்தியமீளவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசிடமிருந்து நஷ்ட ஈட்டினை வற்புறுத்தி மய்ய அரசு பெற்றுத் தர வேண்டும் என்றும், தமிழக மீனவர்கள் அமைதியான வாழ்க்கை நடத்திடத் தேவையானசுமூகமாக சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் எனவும். தமிழ்நாடு சட்டப் பேரவை கேட்டுக் கொள்கிறது.”
கச்சத் தீவு உண்மையில் இராமநாதபுரம் சேதுபதிஅரசருக்குச் சொந்தமானது. இத்தீவில் மருத்துவத்திற்குத் தேவைப்படும் பல்வேறு மூலிகைகளும், உமிரி, சாய வேர் என்ற பச்சிலைகளும் இருந்தன இதைப் பெற ஜனாப் முகமது காதர் மரக்காயர், முத்துசாமிபிள்ளை என்ற வணிகர்களுக்கு அரசர் சேதுபதி ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்குவழங்கி இருந்தார். (ஆவணம்: இராமநாதபுரம் துணைப் பதிவாளர் அலுவலக ஆவண எண் 510/70 தேதி:2.7.1980) ஆண்டாண்டு காலமாக இந்தீவு இராமநாதபுரம் அரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகஇருந்தது. அதற்குப் பின்பு 1947-இல் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டத்தின் மூல இந்தியாவிற்குச் சொந்தமானது.
கச்சத் தீவு பாக் ஜலசந்தியில் இந்தியாவின் தென் கடற்கரையில் பாம்பன் தீவுக்கு அருகில உள்ளது. இதன் பரப்பளவு கிட்டதட்ட சுமார் 4 மைலாகும் சுமார் ஒரு மைல் நீளமுள் சமசர் 1000 அடி அகலமும் கொண்டதாகும் இத்தீவு பவளப் பாறைகளைக் கொண்டதாகும் கள்ளி, கத்தாழை, கருவேல மரங்கள் இங்கு மிகுந்து காணப்படுகின்றன. கடந்த காலங்களில் ஆங்கிலேயக் கப்பற்படையினர் இத்தீவை வெடிகுண்டு சோதனை செய்யவும் தங்களுடைய பொழுது போக்கிற்கு ஏற்ற இடமாகவும் தெரிவு செய்து வைத்திந்தனா 1955-ஆம் ஆண்டு இலங்கை அரசு கச்சத் தீவில் தன் கடற்படை வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க முடிவு எடுத்த முயற்சியை இந்திய நாடாளுமன்றம் கண்டித்தது. அன்று முதல் இப்பிரச்சனை தெரியலாயிற்று கச்சத் தீவைய பற்றி பண்டித் நேரு நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதாவது “போதிய செய்திகள் இந்த விவகாரம் பற்றி இந்திய அரசுக்கு இல்லை கச்சத் தீவு பற்றிய குறிப்பேடுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் இந்தச் சிறு தீவு பற்றி இரு நாடுகளும் பேராய வேண்டும் என்ற கேள்ளிக்கே இடமில்லை இந்தியாவின் தன்மானம் இந்தப் பிரச்சனையில் கலக்கவில்லை. அதுவும் குறிப்பாக நம் பக்கத்து நாடான இலங்கையுடன்” பன்னாட்டு அரசியலில் அணிசேராக் கொள்கை என்ற அடிப்படையில் இந்தப் பிரச்சனையில் ஆர்வம்காட்டவில்லை. நாடாளுமன்றத்தில் பல சமயம் இந்தப் பிரச்சனை எழுந்த பொழுது முன்னாள் பிரதமா இந்திரா காந்தி பாராமுகமாக இருந்தர்.
இப்பிரச்சனையை நாடாளுமன்றத்தில் வைகோ அவர்கள் எழுப்பியுள்ளார் மீனவர் மீது இலங்கைக் கடற்படையின் தாக்குதலைத் தடுக்க வைகோ கடந்த 13 ஆண்டுகளில் 20 முறை பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார் இதுகுறித்து தொடர்ந்து பலதீர்மானங்களின் மூலம் மறுமலர்ச்சி திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதுநாடாளுமன்றத்தில் கச்சத் தீவு குறிதது 23.7.1974-இல் இராமநாதபுரம் நாடாளுமன்றத தொகுதி உறுப்பினரும் பார்வாடு பிளாக தலைவருமான பி.கே. மூககையா தேவா கண்டனத்தைத் தெரிவித்துவிட்டு நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தார் அதுபோன்று பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் முகமது செரீப்பும் வெளிநடப்பு செய்தார் அச்சமயத்தில் முரசொலி மாறன் நாடாளுமன்றத்தில் மௌனமுனியாக அமைதி காத்தார்.
கம்யூனிஸ்டு தலைவர் கல்யாணசுந்தரம் இரா செழியன், நாஞ்சில் மனோகரன், முன்னாள் அமைச்சர் செ. மாதவன், பழனியாண்டி போன்றோர் நாடாளுமன்றத்தில்இப்பிரச்சனை குறித்து பேசி உள்ளனர்.
பல வகையிலே இந்தியாவின் ஓர் அங்கமாக இருக்கக்கூடிய கச்சத் தீவைத் தாரை வார்த்துக் கொடுத்ததும் இலங்கை அரசு அதைத் சொந்தம் கொண்டாடுவதும் சற்றும் நியாயம் கிடையாது. இந்தியாவுக்குச் சொந்தம் என்பதற்குக் கீழ்க்காணும் ஆவணங்கள் சான்று கூறுகின்றன.
இராமநாதபுரம் அரசரின் ஆட்சிச் செயாலர் (Administrative Secretary) 20.4.1950 இல் எஸ்டேட் மேலாளருக்கு எழுதிய மடலில் 1929 – 1945-ஆம் ஆண்டுகளில் மீன் பிடித் துறைகளைப் பற்றிய கோப்புகள் அனுப்பப்பட்டிருக்கின்றன என்றும், அந்தக் கோப்புகளில் கச்சத் தீயைப் பற்றியது ஒன்றும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்த முத்து, மீன்வளத் துறையின் உதவி இயக்குநரின் கடிதத்தோடு கூடிய (1943) திரு.ஆர். கணேசன் என்பவர் தயாரித்த நிலப் படத்தில் கச்சத் தீவு குறிக்கப்பட்டுள்ளது.
1913-ஆம் ஆண்டிலிருந்து 1928 வரைக்குள்ளன் 15-ஆண்டுகளுக்குச் சங்கு சிப்பி மீன்வளத் துறைக்கான ஆங்கில அரசு விட்ட குத்தகை இடங்களில் கச்சத் தீவும் ஒன்று. 1936-இல் குத்தகை விதிகள் புதுப்பிக்கப்பட்ட போதும் கச்சத் தீவு இந்தக் குத்தகை இடங்களில் ஒன்றாக இருந்தது.
19.2.1922 இல் இராமநாதபுரத்தின் திவானாகஇருந்த திரு ஆர் சுப்பையா நாயுடு என்பவர், ஆர். இராஜேசுவர சேதுபதிக்குத் தம் கடல் எல்லைகளைப்பற்றித் தந்த விளக்கங்களில் கச்சத் தீவைப் பற்றிய விவரம் அடங்கியுள்ளது இந்த ஆவண ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்: 27.2.1922.
இராமநாதபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில்4.2.1985-ஆம் நாளன்று, கச்சத் தீவு குத்தகைக்கு விடப்பட்டு ஒப்பாவணம் செய்யப்பட்டது (ஆவண எண்: 134/85)
1.7.1947 முதல் 30.6.1949 வரை கச்சத் தீவுகுத்தகையாக விடப்பட்டது குத்தகை ஒப்பாவணம் பதிவு செய்யப்பட்ட நாள் 26.7.1947 இராமநாதபுரம் சார் பதிவாளர் அலுவலக எண் 278/48.
கச்சத் தீவு இலங்கைக்குச் சொந்தமானது அல்ல என்று இலங்கை அமைச்சர் செயலாளர் கூறுகின்றார் ஆங்கிலேய அரசு, அரசி விக்டோரியா காலத்தில்எல்லை பற்றிய அறிவிப்பில் கச்சத் தீவு குறிப்பிடப்படவில்லை இத்தீவு இராமநாதபுரம் சமஸ்தானத்தியகச் சொந்தமானது என்று அமைச்சரின் செயலாளர் பி.பி. பியரிஸ் கூறுகிறார்.
எனவே, கச்சத் தீவு இந்தியாவிற்குச் சொந்தமானதுஎன்று தெளிவாகத் தெரியும்போது, மத்திய அரசு இதில் மெத்தனப் போக்கில் இருப்பது தமிழகத்தைக் குறிப்பாக இந்திய மீனவர்களை வஞ்சிக்கும் செயலாகும். கச்சத் தீவு இந்தியாவின் தன்மானப் பிரச்சனை மட்டுமல்லாமல் குறிப்பாகப் பாதுகாப்புப் பிரச்சனையாகும் கச்சத் தீவைத் திரும்பப் பெறுவதில், இந்தியா தன்னுடைய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பன்னாட்டு அளவில் இப்படிப்பட்ட சிக்கல்கள் பல காலங்களில் எழுந்துள்ளன அமெரிக்க நாட்டிற்கும் – நெதர்லாந்து நாட்டிற்கும் பால்மாஸ் தீவு பிரச்சனையிலும் டென்மார்க் நாட்டிற்கும் நார்வே நாட்டிற்கும் இடையிலான கிழக்கு கிரீன்லேண்ட தீவு பிரச்சிளையிலும், பிரிட்டன் நாட்டிற்கும் பிரான்சுக்கும் இடையிலான மின் கொயர்ஸ் – எகரோ என்ற தீவுப் பிரச்சனையிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன இந்தப் பிரச்சனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட முடிவின்படி கச்சத் தீவும் இந்தியாவிற்குச் சொந்தம் என்று நிச்சயமாக நிரூபித்தும், சட்டத்தின் மூலமாகவும் பன்னாட்டுச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மரபுகள் மற்றும் உடன்படிக்கையின் அடிப்படையிலும் திரும்பப் பெறலாம்.
இந்தியப் பெருங்கடலில் டீகோ கார்ஸியாவில் அமெரிக்க ஆதிக்கம் கால் வைத்ததை இந்தியா வன்மையாகக் கண்டித்தது. அப்படிப்பட்ட ஆதிக்கச் சக்திகள் இலங்கையின் தயவால் கச்சத் தீவை நெருங்க முடியும். ஆதனால், இந்தியாவினுடைய பாதுகாப்பிற்கும்.இறையாண்மைக்கும் பிற்காலத்தில் ஆபத்து ஏற்படக்கூடும்.
கச்சத் தீவால் ஏற்படும் நன்மைகள்:
இலங்கையில் வெளி ஆதிக்க சக்திகள் தலையீட்டாலஇந்தியாவுக்கு நேரக் கூடிய பாதுகாப்பு அபாயங்களைத் தடுக்க இது ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கும்.
இத்தீவு இந்தியாவுக்குப் பாதுகாப்பு வளையமாகவும், சேதுக் கால்வாய்த் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் பல்வேறு வகைகளில் பயன்படும்.
அணு ஆராயச்சிக்கு ஏற்ற இடமாகும்.
இந்தியக கப்பற்படையினருக்குப் பயிற்சிக களமாக அமைய ஏற்றப் பகுதியாகும்.
போர் விமானங்கள் இறங்கவும் இத்தீவு ஒரு திட்டாக அமையும்.
செய்தித தொடர்பு, கடல் எச்சரிக்கை போன்றதொடர்புச் சாதனங்கள் பயன்படுத்த இத்தீவு ஏற்றதாக இருக்கும்.
மீன் மற்றும் கடல செல்வங்களைப் பற்றிய ஆராயச்சிக்கு ஏற்ற இடமாகவும் இருக்கும்.
கச்சதீவு சிக்கல் ஒரு பக்கம் இருந்தாலும், தமிழக மீனவர் நலன் முக்கியம். இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்கள் இடையே உள்ளபிரச்சனைகளை தீர்க்கவும் வேண்டும். எவ்வளவோ உதவிகள் காந்தி காலத்திலிருந்து இன்று உதவிகள் இலங்கைக்கு செய்துள்ளது. நன்றியற்ற சிங்கள ஆட்சிகள்….
எனவே, மீனவர்கள் பிரச்சனையும், இந்தியப் பாதுகாப்பு, இந்தியப் பெருங்கடலில் வளர்ந்துள்ள அபாயம் போன்ற காரணங்களை வைத்து ஆராய்ந்தால் மத்திய அரசு கச்சத் தீவை உடனே மீட்க அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வது மிகவும் அவசியமானதே முடிந்தால் புவி அரசியல் நலன் கொண்டு போரும் தொடுத்து கச்ச தீவை அவசியம் மீட்க வேண்டும்.
கட்டுரையாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், முதுகலை, சட்டப்படிப்பும் பட்டமும் பெற்றவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் பல்வேறு சிவில், கிரிமினல் மற்றும் பொதுநல வழக்குகளில் வாதாடியுள்ளார். மேலும், டெல்லியில் உள்ள இந்திய சட்ட நிறுவனத்திலும், சர்வதேச சட்ட அமைப்பின் இந்தியா பிரிவிலும், இந்தியா மத்தியஸ்த கவுன்சிலிலும் ஆயுட்கால உறுப்பினராக உள்ளார். விவசாயப் பிரச்சனைகளுக்காகப் போராடியவர்.
கர்மவீரர் காமராசர், கலைஞர் கருணாநிதி, ஈ.வி.கே.சம்பத், பழ.நெடுமாறன், திரு. வைகோ போன்ற தமிழகத்தின் மிகச்சிறந்த தலைவர்களின் நன்மதிப்பையும், கவிஞர் கண்ணதாசன், விவசாயிகளின் தலைவர் சி. நாராயணசாமி நாயுடு ஆகியோரின் நன்மதிப்பையும் பெற்றவர். 23 ஆண்டுகளுக்கு முன்பாகவே, தமிழக அரசியல் கட்சிகளில் முதன்முறையாக செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்பட்டவர். அதன்படி திமுகவின் செய்தி தொடர்பாளராக பணியாற்றியவர். கடந்த 2022 அன்று இவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
கச்சத்தீவு… இந்தியா-இலங்கைக்கு இடையே கடற்பரப்பில், ராமேசுவரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் (12 கடல் மைல்) தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலும் பாக் ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள முட்டை வடிவிலான ஆளில்லாத சிறிய தீவு. கச்சத்தீவு மொத்தம் 285.2 ஏக்கர் பரப்பளவே கொண்டது. தமிழ்நாட்டுக்கு சொந்த இந்த தீவை மத்திய மாநில அரசுகள் இலங்கைக்கு தாரை வார்த்ததன் . விளைவு… பாரம்பரியமாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு, இலங்கை வசம் சென்று விட்டது. இந்திய மண், இன்னொரு நாட்டுக்கு சொந்தமாகிவிட்டது. இதனால் தமிழக மீனவர்கள் தினசரி அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இந்துமகா சமுத்திரம்_சீனாஆதிக்கம்! சமுத்திர பாதுகாப்பு? கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
“ஓட்டுக்கு பணம்” கொடுக்கும் பழக்கத்தை இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியது தமிழகம்! கே.எஸ்.ராதாகிருஷ்ணன்