இந்துமகாசமுத்திரம்_சீனாஆதிக்கம்! இந்து மகா சமுத்திர பாதுகாப்பு கேள்விக்குறி….

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு…

ரு காலத்தில் இந்தியாவின் தெற்கே முக்கடலும் சங்கமிக்கும் இந்து மகா சமுத்திரம் அமைதி நிலவும் மண்டலமாக இருந்தது. இரண்டு உலகப் போர்களிலும் கூட அவற்றில் எந்த சலனமும் இல்லை.

நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்த சமுத்திர பகுதியில் அமெரிக்கப் படைக்கான ஒரு ராணுவ தளத்தை காலத்தில் மையப்பகுதியில் டீகோ கார்சியா நிறுவினார். இது சீசெல்சு தீவுக்கு சொந்தமான தீவை தனக்கு சொந்தமானது சொல்லிக்கொண்டு,பிரிட்டன் குத்தைக்கு எடுத்து அமெரிக்காவுக்கு கீழ் வார குத்தைக்கு விட்டுள்ளது.கடந்த 1973 ல் இந்திரா காந்தி காலத்தில் பல்வேறு எதிர்வினைகள், பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு அந்த தளம் வாபஸ் வாங்கப்பட்டது.

இக்கடலின் திரும்பவும் டீகோ கார்சியா தீவில் என்னும் இடத்தில், ஐக்கிய அமெரிக்காவும் தற்போது கப்பற்படை தளம் அமைத்துள்ளனர். கோ கார்சியா(Diego Garcia) என்பது இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியில் நிலநடுக் கோட்டிற்கு தெற்கே அமைந்துள்ள ஒரு பவளத் தீவு ஆகும். இது பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின் ஒரு பகுதியும், இம்மண்டலத்தில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான சிறிய தீவுகளில் ஒன்றும் ஆகும். 1814 ஆம் ஆண்டில் பிரித்தானியா இத்தீவுகளை உரிமை கோரியது. பின்னர் 1965 ஆம் ஆண்டில் இவற்றைப் பிரித்தானிய தனது பிராந்தியமாக இணைத்துக் கொண்டது. இத்தீவுகளில் தியேகோ கார்சியா மிகப் பெரியதும், குடிமக்கள் அற்ற ஒரேயொரு தீவுமாகும். டீகோ கார்சியா தான்சானியா கரையின் கிழக்கே 3,535 கிமீ (2,197 மைல்) தூரத்திலும், இந்தியாவின் தென்முனையில் (கன்னியாகுமரியில்) இருந்து தென்-தென்மேற்கே 1,796 கிமீ (1,116 மைல்) தூரத்திலும், ஆத்திரேலியாவின் மேற்குக் கரையில் இருந்து 4,723 கிமீ (2,935 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது. தியேகோ கார்சியா சாகோசு தீவுக் கூட்டத்தில் சார்கோசு-இலட்சத்தீவு குன்றின் தென்கோடியில் உள்ளது.

டீகோ கார்சியாவில் ஐக்கிய அமெரிக்கக் கடற்படை தனது தேவைக்கான உதவித் தளத்தை இங்கு வைத்துள்ளது. பெரும் கடற்படைக் கப்பல் மற்றும் நீர்மூழ்கி உதவித் தளம், படைத்துறைத் தேவைக்கான வான்படைத் தளம், தகவல் தொடர்பு, விண்வெளித் தொடர்புத்தளம் அகியவை இங்கு பேணப்படு கின்றன.

இன்றைய அளவில் இலங்கை அம்மந் தோட்டா, பட்டு வழி பாதை, கொழும்பு கிழக்கு துறைமுக நிறுத்தம்,கச்சத்தீவுவரை, யாழ்ப்பாணம் பகுதிகளிலும் சீனா ஆதிக்கம் பெருகி இருக்கிறது.

இந்து மகா சமுத்திரத்தில் சீனா மாதம் ஒன்று வீதமாக ஆறு போர்க்கப்பல்களை இறக்கி உள்ளது. 2019 வரை சுமார் 45 சீனப் படைப்பிரிவுக் கப்பல்கள் இந்து மகா சமுத்திரத்தில் உலவுகின்றன. அதில் பிரச்சனைக்குரிய யுவான்சுவாங் 5 என்ற கப்பலும் அடக்கம்.இந்த வாரம் இன்னொரு சீனா ஆய்வு கப்பல் அவர் இருக்கிறது. #Shi_Yan6, a Chinese ocean research vessel has entered the Malacca strait, displaying its destination as Indian Ocean #India #indianocean One more #Chinesen- Colombo -Bay of Bengal ;the vessel is expected to run an 80-day sea operation in the Indian Ocean Region .- sources

மீண்டும் இந்து மகா சமுத்திரத்தில் சீனா உளவுக்கப்பல் வருகிறது. சில மதங்கள் முன் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க கூட்டு பாதுகாப்பு ராணுவ பயிற்சிகளும் இங்கு நடந்தது.இன்னொரு பக்கம் ஜப்பான் எண்ணெய் (oil) ஆய்வு பணிகள். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் முகமாகவும் அவற்றைச் சமாளிக்க வேண்டியும் இந்திய ராணுவம் கிழக்கு ஆப்பிரிக்க தீவுநாடான மொரிசியஸிலும் மத்திய கிழக்கு நாடான ஓமன் கடல் பகுதியிலும் தங்களது ராணுவ தளத்தை நிறுவிக் கொண்டிருக்கிறது.

அங்கே ராணுவ வீரர்களுக்கான கட்டமைப்புகள் நவீன தொழில்நுட்பக் கருவிகள் ராடார் வசதியுடன் இந்தத் தளங்கள் பல கோடி செலவில் அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்தக் கடல் பகுதியில் இந்தியாவிற்கு சவால் விடும் வகையில் ஆதிக்க நாடுகள் சூழ்ந்து வருவது ஒரு ஆபத்தாகவே பார்க்க வேண்டிய விசயம்.

இன்றைய மத்திய அரசு இதை உன்னிப்பாக கவனித்து நாட்டின் பாதுகாப்பு கருதி அனேக முன்னேற்பாடுகளை செய்து வருவது பாராட்டுதற்குரியது. இதன் அருகே இருக்கும் அன்றைய, சூயஸ் கால்வாய் பிரச்சனயை போல ஆகி விட கூடாது. நறுமணத் திரவியங்ளையும் பல்வேறு வணிகப் பொருட்களையும் பல நூறு ஆண்டுகளாக சுமந்து அலைந்த இந்திய பெருங்கடலின் கப்பல்கள் போக வாஸ்கோடகாமா, மரக்கோ போலே என பலர் மற்றும் பல்வேறு காலனி வணிகர்களும் வந்து போன இந்து மகா சமுத்திரத்தில் மீண்டும் அமைதியை நிலைநாட்டுவது உலக நாடுகளின் ஜனநாயக பண்பு மட்டும் அல்ல அதை ஒட்டி ஏற்படும் வளர்ச்சிகளுக்கு எதுவும் தடையாக இருக்க கூடாது என்பது தான் நமது விருப்பமும். உலகின் நிலப்பரப்பில் 20 சதவீத இடத்தை ஆழ்ந்தும் அகன்றும் கொண்டிருக்கிறது இந்திய பெருங்கடல். அதன் வளத்தை காக்க வேண்டியது நமது கடமை.

#இந்துமகாசமுத்திரம்_சீனாஆதிக்கம்
#இந்துமகாசமுத்திரபாதுகாப்பு_இந்தியா
#indianocean #இலங்கை #Srilanka
#டீகோகார்சியா #இந்துமகாசமுத்திரம
#DiegoGarcia
K.S.Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
25-9-2023.
‪(Pic-The Hindu 26-9-2023.‬)