வேலூர்: சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்த நிலையிர், அதை தவறி விழுந்த 2 மாணவிகள் பரிதாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் வாணியம்பாடி அருகே நடைபெற்றுள்ளது. இது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக சாலை பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும், சாலை பணிகள் நடைபெறும் இடங்களில், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி, தடுப்பு கட்டைகள், பேரிகார்டு போன்றவை வைத்து தடுப்பு ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், ஒப்பந்தாரர்களின் மெத்தனத்தால், வாணியம்பாடியில் இரண்டு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிந்துள்ளனர்.
: வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியில் சாலை பணிக்காக அந்த பகுதியில் குழி தோண்டப்பட்டு மண் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மண் எடுத்த அந்த பகுதி மூடப்படாமல் , எந்தவித தடுப்பு அரண்களும் அமைக்கப்பட்டாமல் இருந்து வந்துள்ளது. சமீபகாலமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், வாணியம்பாடி பகுதியில் பெய்த மழை காரணமாக, மண் எடுக்கப்பட்ட பள்ளங்கள் மழை நீர் தேங்கி காணப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவி மற்றும் 5வகுப்பு மாணவி இருவரும், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துவிட்டு, மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் கடைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்ததாக கூறப்படுகிறது.
மாணவிகள் கடைக்குச் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததை கண்டு, அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். எங்கும் காணப்படாத நிலையில், பின்னர் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் மழைநீர் தேங்கி இருந்த பள்ளத்தில் தேடிய போது, 2 மாணவிகளும் பள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதைக்கண்ட அந்த மாணவிகளின் பெற்றோர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மாணவிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணைநடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாக மூடாக ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.தை ஏற்படுத்தி உள்ளது.