டில்லி:

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (17ந்தேதி) தொடங்கி உள்ளது. முன்னதாக நேற்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும்.

17வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்து கடந்த ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற்றது. தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால், மீண்டும் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைமையில் கடந்த மே மாதம் 30ந்தேதி புதிய அமைச்சரவை பதவி எற்றது.

இந்த நிலையில், 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.  இன்றைய கூட்டத்தை தற்காலிக இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் நடத்துகிறார். அதைத்தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும்.  சுமார் 2 நாட்கள் பதவி ஏற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து வரும் புதன்கிழமை (19ந்தேதி)  சபாநாகர் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. அதன்பிறகு வரும் 20ந்தேதி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை நிகழ்த்துக்கிறார்.

இந்த கூட்டத்தொடரில் முக்கியமான முத்தலாக் மசோதா உள்பட  10 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து  அடுத்த மாதம் 5ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து கூட்டத்தொடர் ஜூலை 16ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.