download (3)
பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் சென்னையில் இன்று மாலை  மூன்று  மணிக்கு காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
எம்ஜியார், சிவாஜி உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியவர்.  1960களில் திரைத்துறைக்கு நுழைந்த இவர், அன்பே வா, தெய்வமகன், அதே கண்கள் போன்று பல சூப்பர் ஹிட் படங்களை அளித்தவர்.
கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த இவர், இன்று (15 ஜூன் 2016) மாலை மூன்று மணி அளவில் காலமானார்.
சென்னை, கானத்தூரில் மாயாஜாலுக்கு எதிரில்  உள்ள  இவரின் மூத்த மகனது வீட்டில் நாளை மாலை நான்கு மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
திருலோகசந்தர் இயக்கிய படங்கள்.. .
வீர திருமகன், நானும் ஒரு பெண், காக்கும் கரங்கள், ராமு,அன்பே வா, அன்பளிப்பு, அதே கண்கள், திருடன், தங்கை, இரு மலர்கள், தெய்வ மகன், எங்கிருந்தோ வந்தாள், எங்க மாமா, பாரத விலாஸ்,தீர்க்க சுமங்கலி, இன்ஸ்பெக்டர் மனைவி, டாக்டர் சிவா, அன்பே ஆருயிரே, அவன்தான் மனிதன், பத்ரகாளி, வணக்கத்துக்குரிய காதலியே, பைலட் பிரேம்நாத், அன்புள்ள அப்பா, என்று ஏராளமான படங்களை இயக்கியவர்.. எஸ் பி முத்துராமனின் குருநாதர்.. ஏ வி எம் இன் ஆஸ்தான இயக்குனர் ஒரு காலத்தில் .. ஏ வி எம் சரவணனின் நெருங்கிய நண்பர்.. சிவாஜி கு மிகவும் பிடித்த இயக்குனர்., சிவாஜி ஜெயலலிதா வை வைத்தே தெய்வ மகன், எங்கிருந்தோ வந்தாள் , எங்க மாமா, அவன்தான் மனிதன்.