விடுமுறையை கழிக்க அமெரிக்கா சென்ற ரஜினிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் பரவின.
இதன் காரணமாகவே, கபாலி படத்தின் ஆடியோ ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது.
இது குறித்து ரஜினி தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படாத நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி தாணி, “அமெரிக்காவில் ரஜினி நலமுடன் இருக்கிறார். என்னிடம் போனில் பேசினார். ஜூன் இறுதி வாரத்தில் சென்னை வருகிறார்” என்று கூறினார்.
கபாலிக்கு அடுத்ததாய் உருவாகிவரும் 2.0 படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக, அப் படத்தின் இயக்குநர் ஷங்கரும் தனது பேஸ்புக் பக்கத்தில்  தெரிவித்திருந்தார்.
547612943Rajinikanth2
ஆனாலும் தற்போது ரஜினியின் உடல் நிலை பற்றி கவலைக்குரிய விதத்தில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.  மேலும் ரஜினி சென்னை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் சிலர் செய்தி பரப்பி வருகிறார்கள்.   இணைய இதழ் ஒன்று, ரஜினி மரணமடைந்துவிட்டதாகவே ஒரு தகவலை வெளியிட்டது. இது  ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியும் வேதனையும் படவைத்துள்ளது.
இந்த நிலையில் ரஜினி குடும்பத்தார், “விடுமுறையை கழிக்கத்தான் ரஜினி அமெரிக்கா வந்தார். வந்த இடத்தில் சில வழக்கமான செக்அப்புகளுக்காக மருத்துவமனைக்குச் சென்றார். மற்றபடி பயப்படும்படியாக ஏதுமில்லை.
ரஜினி குறித்து வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். அவர் நலமுடன் இருக்கிறார். இந்த (ஜூன்) மாத இறுதியில் சென்னை திரும்புகிறார்” என்று தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் உதவியாளர் ரியாஸ்,”ரஜினி நலமுடன் இருக்கிறார். அவரது உடல் நிலை பற்றி தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது  சப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்”  என்று தெரிவித்துள்ளார்.
ஆகவே ரஜினி ரசிகர்களே.. கவலை வேண்டாம். ரஜினி நலமாகவே உள்ளார்!