சென்னை:  நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்  ஒதுக்கீடு செய்து  இந்திய வெளியிட்ட தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால், நாம் தமிழர் கட்சி தலைவர் மைக் மோகனாக மாறுவார் என சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தங்களுக்கு மீண்டும் கரும்பு விவசாயி சின்னம் என்று நாம் தமிழர் கட்சி கோரிய நிலையில்,  முன்னதாக தேர்தல் சின்னம் ஒதுக்க கோரி  தேர்தல் ஆணையத்தை அணுகிய கர்நாடக மாநில கட்சிக்கு, கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த  சீமான், இது பாஜகவின் சதி எனச் சாடினார்.

ஆனால், தேர்தல் ஆணையம்,  நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 2023ம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி, கர்நாடகாவைத் சேர்ந்த ஒரு பதிவுபெற்ற கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டதால், அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியதாக  தெரிவித்தது.

நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி. அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு ஒரு சின்னத்தை முழுமையாக ஒதுக்கீடு செய்ய முடியாது என தெரிவித்தது. மேலும் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி பதிவு செய்ததன் அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என தேர்தல் ஆணையம்  நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.

இதையடுத்து சீமான் நீதிமன்றங்களை நாடிய நிலையில், சாதகமான தீர்ப்பு கிடைக்காத நிலையில், வேறு சின்னங்களை ஒதக்க கோரியது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இதே போல சுயேட்சை கட்சிகளுக்கு எந்த எந்த சின்னம் என்ற அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.