சென்னை:

மிழக கலாச்சாரத்தை அறிந்துகொள்ள தமிழகம் வந்துள்ள டென்மார்க் மாணவர்கள், திருக்குறளை  தமிழக அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் முன்னிலையில் அழகாக ஒப்புவித்தனர். இது அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

டென்மார்க்கில் இருந்து தமிழக கல்வி மற்றும் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள மாணவர்கள் குழு தமிழகம் வந்துள்ளது. இந்த மானவர்கள் இன்று தலைமை செயலகம் வந்து, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை சந்தித்தனர்.

அப்போது, அவர் முன்னிலையில், திருக்குறளை அழகாக ஒப்புவித்தனர்.  கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக ; என்ற குறளை முதலில் கூறினர். அதைத்தொடர்ந்து, எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு  என்ற குறளையும் ஒப்புவித்து, அதற்கான  விளக்கத்தையும் கூறினர்.

அவர்களுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர்  பாண்டியராஜன், அவர்களுக்கு புத்தகங்களை பரிசளித்தார்.