தங்கதமிழ்செல்வன் அப்பல்லோவில் அனுமதி!

சென்னை,

டிடிவி தினகரன் அணியை சேர்ந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான  தங்க தமிழ்செல்வன் உடல்நலமில்லாமல் திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் உடல்நலக்குறைவாக காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென ஏற்பட்ட அதிகபடியாக வயிற்றுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள்  சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினரான  தங்கதமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர். இவர் உள்பட 18 பேரை தமிழக சபாநாயகர் தனபால், எனடப்பாடி அரசுக்கு எதிராக செயல்பட்டதாக தகுதி நீக்கம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Thanga Tamilselvan admitted in Apollo hospital for sudden Stomach pain