சென்னை,

நேற்று  நடைபெற்ற புத்தமத மறுமலர்ச்சி மாநாட்டில் 80க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தினர் புத்த மதத்திற்கு மாறினர்.

இந்து சமயத்தில் உள்ள சாதி பாகுபாடு காரணமாக அவர்கள் மதம் மாறியதாக கூறப்படுகிறது.

நேற்று சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற புத்தமத மறுமலர்ச்சி மாநாட்டில் 80க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தினர் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்தை தழுவினர்.

இந்த மாநாட்டில் பெங்களூரை சேர்ந்த விநாயகர் ரக்ஹிதா பாண்டே தலைமையில்  நூற்றுக்கணக் கான புத்த மதத்தின்ர்  கலந்துகொண்டனர்.  இந்த மாநாடு புத்தர்களுக்கான உருமாறற மாநாடு என்று அழைக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் புத்தமதம், சமத்துவம் மற்றும் சக மனிதர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுப்பதாகவும்,  என்னுடைய கல்லூரி நாட்களில் மறைமுகமாகப் பாரபட்சம் காட்டப்பட்டது, நாம் வரலாற்று ரீதியாக புத்த மாதத்தை சார்ந்தவர்கள் என்று மாநாட்டில் கலந்துகொண்ட  ஒரு மருத்துவ மருத்துவ உதவியாளர் பேராசிரியர் எஸ். சுகனேஷ் என்வர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பல தலித்துகள் இந்து மதத்திற்கு முன்னர் பெளத்தர்கள் பெரும்பான்மை மதமாக இருந்தாக பேசப்பட்டது.

பின்னர் மாநாட்டில் அனைத்து மாவட்டங்களிலும்,  புத்தர் தர்ம வகுப்புகள் நடத்த தீர்மானத்தை நிறைவேற்றியது.