சென்னை,

டப்பாடியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை இன்று முடிவடையும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்றே தீர்ப்பு வழங்கப்படுமா அல்லது ஒத்தி வைக்கப்படுமா என எதிர்ப்பாபு எழுந்துள்ளது.

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்க  புதிய நீதிபதி முன் கடந்த 4ந்தேதி விசாரணை நடைபெற்றது. பின்னர் விசாரணை 9ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் வடமாநில பிரபல சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர்கள் வாதிகள், பிரதிவாதிகள் சார்பாக வாதாடி வருகின்றனர்.

4ந்தேதி விசாரணையின்போது,  ஆட்சியை கவிழ்க்க சதியில் ஈடுபட்டதால்தான் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தனபால் தரப்பில் ஆஜராக வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி இந்த குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரவிசந்திர பாபு, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அனைத்து தரப்பினரும் இன்றே தங்களது வாதத்தை முடித்து கொள்ளவேண்டும் என கடந்த வாரம் விசாரணையின்போது நீதிபதி ரவிசந்திர பாபு தெரிவித்தார்.

எனவே, இந்த வழக்கில் இறுதி விசாரணை இன்றே முடிவடைந்து தீர்ப்பு இன்றே அறிவிக்கப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்று பரபரப்பு நிலவி வருகிறது.