விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தளபதி 65’ உருவாகவுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது
இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது அது வேறு யாரும் இல்லை பிரபல இசையமைப்பாளர் தமன் தான் அது.
இசையமைப்பாளர் தமன் இசையமைப்பில் அல்லு அர்ஜூனின் அல வைக்குந்தபுரம்லோ பட பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற புட்டபும்மா என்ற பாடல் யூடியூபில் மாஸ் ஹிட் குடுத்தது
விஜய் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கவுள்ளார் தமன். இது தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், தொலைக்காட்சி பேட்டியொன்றில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
“விஜய்யின் அடுத்த படத்துக்கு நீங்கள் இசையமைக்கப்போகிறீர்கள் என்று தெரிகிறதே?” என்ற கேள்விக்கு “ஆம். மிகவும் ஆர்வத்துடன் அந்தப் படத்தை எதிர்நோக்கியிருக்கிறேன். மூன்று வருடங்களாகப் பேசி வருகிறோம். இப்போதுதான் எல்லாம் கைகூடி வந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் தமன்.