பிரிட்டனின் பிரபலமான வோக் பத்திரிகையின் முகப்பு அட்டையை 85 வயதான ஜூடி டென்ச்சின் புகைப்படம் அலங்கரித்துள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் எம் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஜூடி டென்ச்.
அந்த பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், ‘வயதைப் பற்றி நான் நினைக்க விரும்பவில்லை. அது மிகவும் பயங்கரமாக இருக்கிறது. சமீபத்தில் மேகி ஸ்மித் (சக நடிகை) கார் ஓட்டுநர் உரிமத்தைப் பறிக்கப்போகிறார்கள் என்ற பயத்தில் இருந்தார். அப்படி பறிக்கப்படுவது நமது உடலுக்கு ஏற்படும் மிகப்பெரிய அதிர்ச்சி.மற்றவ்ர்களைச் சார்ந்திருப்பது கொடுமையானது என நினைக்கிறேன்” என்று ஜூடி டென்ச் பேசியுள்ளார்.
https://www.instagram.com/p/B_xgHMdpm5S/
கடந்த 2017ஆம் ஆண்டு, பார்வைத் திறன் குறைந்து வருவதால் ஜூடி டென்ச் அவரது கார் ஓட்டுநர் உரிமத்தை விட்டுத் தர வேண்டிய சூழல் உருவானது குறிப்பிடத்தக்கது.
மேலும் வோக் அட்டையில் இடம்பெற்ற மிக வயதான நட்சத்திரம் என்ற பெருமையையும் இதன் மூலம் ஜூடி டென்ச் பெற்றுள்ளார் .