விரைவில் எதிர்பார்க்கலாம் ‘தளபதி 66’ அறிவிப்பு….!

Must read

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது ,

தளபதி 66 படத்தினை தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி இயக்கவுள்ளார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு இந்த படத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார் என்பதும் தான்.

கிட்டத்தட்ட இந்த படம் உறுதியாகிவிட்டது ஆயுத பூஜைக்கு படம் பூஜையுடன் தொடங்கவுள்ளது என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தற்போது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வம்சி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் அதனை பற்றி தற்போதே தெரிவித்து சுவாரசியத்தை உடைக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இவர் சொல்வதில் இருந்தே இது விஜயுடன் தொடங்கவுள்ள படம் தான் என்பது உறுதியாகிவிட்டதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

More articles

Latest article