‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

Must read

அருண் விஜய் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படம் பார்டர். அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள இந்த படத்தில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்துள்ளார் . இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ். ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

11:11 புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் DR.பிரபு திலக் வழங்கும் பார்டர் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் வரும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளது.

More articles

Latest article