M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் தயாரிக்கும், இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜை இன்று துவங்கியது.

இயக்குநர் திருமலை பாலுச்சாமி படத்தினை எழுதி, இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார் மற்றும் சுஹாசினி மணிரத்னம் முதன்மை பாத்திரங்களில், நடிக்கின்றனர்.

இப்படத்தில் சரத்குமார் நாயகனாக நடிக்க, அஷ்வதி நாயகியாக நடிக்கிறார். நந்தா, சுஹாசினி, சிங்கம் புலி, சித்திக், கஞ்சா கருப்பு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வேத்சங்கர் சுகவனம் இசையமைக்கிறார். தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து புகழ்பெற்ற குமார் ஶ்ரீதர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார். சண்டை பயிற்சி விக்கி வினோத்குமார் செய்ய, கலை இயக்கத்தை ஶ்ரீமன் பாலாஜி கவனிக்கின்றனர்.