நெல்லை: திருநெல்வேலி டவுண் பகுதியில் செயல்பட்டு  தனியார் பள்ளியான சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் சுவர் இடிந்துவிழுந்து 2 மாணவர்கள்  பரிதாபமாக பலியாகி உள்ளனர். பள்ளியில் பெற்றோர்கள் குவிந்து வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,  திருநெல்வேலி டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளியான  சாப்டர் மேல்நிலைப்பள்ளியின்  கழிவறை சுவர் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தின்போது, கழிவறையில் சிறுநீர் கழிக்கச் சென்ற 8-ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் சிக்சி உயிரிழந்தனர். மேலும், 2 மாணவர்கள் படுகாயமடைந்த னர்.  படுகாயமடைந்த மாணவர்கள் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்துமீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரும் ஏராளமானோர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மாணாக்கர்களின் பெற்றோர்கள் பள்ளியை நோக்கி படையெடுத்து வருவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள பெற்றோர்கள், கொரோனா தொற்றுக்கு பிறகு பள்ளிகளிளை முழுமையாக நடத்தி வரும், சாப்டர் பள்ளி நிர்வாகத்தினர், மாணாக்கர்களின் கல்வி கட்டணத்தை மட்டும் கறாராக வசூலிக்கின்றனர், ஆனால் மாணாக்கர்களின் பாதுகாப்பில் அக்கறை கொள்வதில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர்.