மே 22ந்தேதி கோவில் பூசாரிகள் நல சங்க மாநாடு! சேகர்பாபு

Must read

சென்னை:  கோயில் பூசாரிகள் நல சங்கத்தின் சென்னை மண்டல மாநாடு மே 22ல் நடைபெற உள்ளது இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்க உள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் வாசு கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோயில் பூசாரிகள் நல சங்க தலைவர் வாசு, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவியேற்ற பிறகு அறநிலையத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இறைவனுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் படிப்படியாக மீட்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. இந்த அரசு ஆன்மீக அரசாகவும், பூசாரிகளுக்கு நன்மை பயக்கும் அரசாக உள்ளது. நிதி நெருக்கடி இருந்த போதிலும் பூசாரிகள் கேட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. அன்னை தமிழில் அர்ச்சனைகள், 10 கோயில்களில் பிரசாத விநியோகம், ஏராளமான கோயில்களில் திருப்பணி என எண்ணற்ற செயல் திட்டங்களை அரசு நிதி மூலம் மனமுவந்து நிறைவேற்றி வருகிறது.

இதன் காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் மே 22ம் தேதி கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் சென்னை மண்டல மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்க அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்க  விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல மாநாடு முடிந்த பின்பு கோயில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article