16/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,202 பேருக்கு கொரோனா பாதிப்பு…

Must read

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி,நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 2,202 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,23,801-ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 27 பேர் நேற்று  இறந்துள்ளனர். இதன்மூலம் நாடுமுழுவதும் இதுவரை உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 5,24,241-ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது

கடந் 24மணி நேரத்தில், மேலும் 2,550 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,82,243 -ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது

தற்போது நாடு முழுவதும் 17,317 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3,10,218 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,91,37,34,314 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

More articles

Latest article