சிட்னி 3-வது டெஸ்ட் போட்டி வீரர்கள் பெயர் அறிவிப்பு, தமிழகவீரர் நடராஜன் இடம்பெறவில்லை….

Must read

சிட்னி: சிட்னியில் நாளை நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு  எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர்  நடராஜன் பெயர் இடம்பெறவில்லை. இது தமிழக ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு கடந்த ஆண்டு இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், அங்கு  ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.  இதுவரை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள டெஸ்ட் போட்டியில்,  1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், 3வது  டெஸ்ட் போட்டி  நாளை  (7 ஆம் தேதி)  சிட்னியில்  தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.
அதன்படி,  ரஹானே தலைமையிலான 11 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுஉள்ளது. அதன்படி, அஜின்கியா ரகானே , ரோகித் சர்மா ,சுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா, முகமது சிராஜ், நவதீப் சைனி ஆகியோர் இம்பிடித்துள்ளனர்.
தமிழக வீரர்நடராஜன் உள்பட  தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலல் உள்பட சிலர் இடம்பெறவில்லை. ரோஹித் சர்மா திரும்பி வந்துள்ளார், நவ்தீப் சைனி  என்ற வீரர் சிட்னியில் டெஸ்ட் அறிமுகமாக உள்ளார்.
தமிழக வீரரான நடராஜன் அணியில் இடம்பெறுவார்  என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவரது பெயர் அறிவிக்கப்படாதது, ரசிகர்களுக்கு  ஏமாற்றத்தை தந்துள்ளது.

More articles

Latest article