டெல்லி: வருமான வரி கட்டுவதற்கு தகுதியான ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது சரி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையின்போது, ஆண்டு வருமானம் 8 லட்சம் உள்ளவர்கள் வருமான வரி கட்டுவதற்கு தகுதியானவர்கள் என்ற நிலையில், அவர்கள் ஏழைகள் என்று எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதகளே இன்று உயர்ஜாதி ஏழைகளுக்க்கு 10% இட ஒதுக்கீடு  வழங்கி தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு  அறிவித்து உடனே நடைமுறைப்படுத்தியது. இந்த இடஒதுக்கிட்டின் அளவுகோளாக, உயர்ஜாதி ஏழைகள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவில் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.8லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும், 5ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலயம் வைத்திருப்பவர்கள், 1000 சதுரஅடிக்கு குறைவான வீடு உள்ளவர்கள், இந்த இடஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என அறிவித்திருந்தார்.

இந்தியால் இடஒதுக்கீடு  மண்டல் குழு பரிந்துரைகளின் படியே வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 27 சதவீத இடஒதுக்கீடு  வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு  எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை முன்பு விசாரித்த  உச்சநீதிமன்றநீதிபதிகள்  சந்திரசூட், விக்ரம்நாத், பிவி நாகரத்னா ஆகியோர் அடங்கிய 3 பேர் பெஞ்ச் விசாரித்தது. அப்போது மத்தியஅரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தது.

அதாவது,  ஆண்டு வருமானம் 8 லட்சம் உள்ளவர்கள் வருமான வரி கட்டுவதற்கு தகுதியானவர்கள் என்ற நிலையில், அவர்கள் ஏழைகள் என்று எப்படி கூற முடியும், அவர்களுக்கு இடஒதுக்கீடு ஏன் என்றும் கேள்வி எழுப்பியது. வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்பது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஆனால், பின்னர் இந்த வழக்கு 5நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10சதவிகித இடஒதுக்கீடு சரியானது என தீர்ப்பு வழங்கி உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்தனர்.

மண்டல் கமிஷன் அறிக்கை? உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பால், முந்தைய 50% இடஒதுக்கீடு தீர்ப்பு கேள்விக்குறியானது…