வரிவிலக்கு அதிகாரிகளை அழவைத்த படம்

Must read

                                

விஜயலட்சுமி
விஜயலட்சுமி

விக்டோரியா வாச் டாக் எஸ்.சுபாகரன் வழங்க RELAX ADDS PRODUCTIONS  எஸ்.கல்யாண் தயாரிக்கும் படம் “ கத சொல்லப் போறோம்”.
இந்த படத்தில் பேபி ஷிபானா, ரவீனா, அரவிந்த், ரகுநாத், அர்ஜுன், ஜெனி ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  மற்றும் ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, அக்ஷரா, காளி வெங்கட், பசங்க சிவகுமார் ராகுல் சாமுவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
 கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  எஸ்.கல்யாண்.  இவர் நாளைய இயக்குனர் போட்டியில் குறும்படம் இயக்கியவர்
இந்த படத்தில் இருபது குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனாதை ஆசிரமத்தில்  வளரும் ஒவ்வொரு குழந்தையும்  தாய் பாசத்திற்காக ஏங்கி கொண்டுதான் இருப்பார்கள். ஒரு முறையாவது தனது அம்மாவை பார்த்து விட முடியாத என்ற ஏக்கம் அவர்களுக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அப்படி இருக்கும் குழந்தைகளின் கதைதான் இந்த கத சொல்லப் போறோம் “. இந்தப்
படம் குழந்தைகளுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாமல் ஒரு மெசேஜ் சொல்ற படமாகவும் இருக்கும்” என்றவர், “ வரிவிலக்கு கேட்டு இந்த படத்தை திரையிட்ட போது வரிவிலக்கு அதிகாரிகளாக வந்த வி.எஸ்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி, எம்.எம்.ராஜம் ஆகியோர் படத்தை பார்த்து அழுது விட்டனர். படம் சிறப்பாக உள்ளது என்று பாராட்டி வரிவிலக்கும் அளித்தனர் என்றார் இயக்குனர் கல்யாண்.
படம் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்த்த சுபாகரன் தனது விக்டோரியா வாச் டாக் பட நிறுவனம் மூலம் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார்.

More articles

Latest article