ரூ. 8.30 லட்சம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் சிக்கினார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் பார் உரிமையாளர்களிடம் ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் சிக்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபான பார்களை புதுப்பிப்பதற்கான ஏலம் நடந்து வருகிறது. உரிமம் புதுப்பித்து வழங்க பார் உரிமையாளர்களிடம் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மதிசெல்வன் லஞ்சம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று ரூ.8.30 லட்சம் லஞ்சம் பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் மதி செல்வனை கைது செய்தனர். மேலும் 2 அதிகாரிகளும் அவருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
tasmac manager, was arrested for allegedly bribing rs. 8.30 lakh