சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,575 பேருக்கு கொரோனாபாதிப்பு 1,610 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 1575 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 26,21,086ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,610 பேர் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25,69,771 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 35ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும்1,51,231 பேருக்கு சோதனை நடத்தப்பட்ட நிலையில், இதுவரை 2,29,55,137 பேருக்கு ஆர்டி பிசிஆர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.