சென்னை:

நடிகர் கமல்ஹாசன் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது தமிழக அரசை தாக்கி ஒரு பதிவை இன்று வெளியிட்டுள்ளார்.

அதில்,‘‘ ஒரு மாநிலத்தில் துயர மற்றும் ஊழல் சம்பவங்கள் நிகழ்ந்தால் அம்மாநில முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்?.

தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்துள்ளது. என்னுடைய நோக்கமானது சிறந்த தமிழகமாகும். என்னுடைய குரலை வலுவாக்கும் தைரியம் யாருக்கு உள்ளது?. திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும். தற்போது உள்ள அரசியல் கட்சிகள் சரியில்லையெனில் மற்றொன்றை தேட வேண்டியவரும்’’ என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் இந்த பதிவுக்கு அதிமுக சார்பில் அமமச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்