சென்னை:

பெரம்பலூர் மாவட்டம்குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமசந்திரன் கூறுகையில், ‘‘ஜெயலலிதா விரைவில் மரணம் தழுவும் வகையில் செயல்பட்டது யார்?.

1989ம் ஆண்டில் தினகரனை ஜெயலலிதா விரட்டியடித்தார். கட்சியை கைப்பற்ற முயன்றதால் தான் தினகரன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அதிமுக.வில் தொண்டனாக கூட தினகரன் இருந்தது கிடையாது. தினகரனை சந்திக்க கூடாது என திவாகரன் கூறியிருந்தார்.

சசிகலா, தினகரன் ஆகியோரால் தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்பட சசி குடும்பமே காரணம். ஜெயலலிதா உயிரை கொடுத்து உருவாக்கிய ஆடசியை தினகரன் கலைக்க முயற்சிக்கிறார். சசிகலாவின் வாரிசு தினகரன் என்பதில் மாற்றம் இல்லை.

ஆட்சியை பழனிசாமியிடம் ஒப்படைத்துவிட்டு கட்சியை தினகரனிடம் ஒப்படைத்தது ஏன்? திவாகரன் மகன் மேலூர் கூட்டத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார். தினகரன் வாரிசு அரசியல் செய்கிறார். அதிமுக அரசை மிரட்டும் வண்ணம் தினகரன் செயல்படுகிறார். சிங்கப்பூரில் இருந்து கைது செய்து அழைத்து வரப்பட்டவர் தினகரன்’’ என்றார்.
.