சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2018-19ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், கல்வித்துறைக்கு மற்ற துறைகளை விட அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு 27,205 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை குறித்த அறிவுப்புகள்:
பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த 333 கோடி ஒதுக்கீடு.
ரூ. 200 கோடி ரூபாய் செலவில், நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்
100 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 100 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன
பள்ளி மாணவர்களின் நலத்திட்டங்களுக்காக ஆயிரத்து 653 கோடியே 89 லட்சம் ரூபாய்.
மடிக்கணினி வழங்குவதற்கு 758 கோடி ஒதுக்கீடு.
பள்ளி இடைநிற்றலைக் குறைப்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு 313 கோடியே 58 லட்சம்.
உயர்கல்வித்துறைக்கு நான்காயிரத்து 620 கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரியின் விக்டோரியா விடுதி மற்றும் ராணி மேரிக் கல்லூரியில் உள்ள பாரம்பரியமக்க கட்டிடங்கள் 26 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளன.
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே திரும்ப வழங்கும் திட்டத்திற்காக 682 கோடியே 87 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நல்கைத் தொகை மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக 500 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
மருத்துவகல்வி இடங்களை மேலும் உயர்த்த நடவடிக்கை.