தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தலாம்: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக்குழு பரிந்துரை

Must read

டில்லி:

மிழகத்தில் தேனி மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தலாம் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள  மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினேபா ஆராய்ச்சி செய்வதற்கான பணியை தொடங்க  கடந்த 2011ம் ஆண்டு  சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

அதைத்தொடர்ந்து நியூட்ரினோ  ஆய்வகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், இந்த நியூட்ரினோ ஆய்வகம் காரணமாக  மேற்குத் தொடர்ச்சி மலைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும்,  சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்   என்று பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், நியூட்ரினோ ஆய்வகம் தொடங்க பசுமை தீர்ப்பாயம்  அனுமதி மறுத்தது

இந்நிலையில்,  நியூட்ரினோ திட்டத்திற்கான அனுமதியை புதியதாக வழங்கக்கோரி டாடா  நிறுவனம் மீண்டும் மத்திய அரசுடககு கடந்த ஜனவரி 5-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்க விண்ணப்பித்திருந்தது.

அதைத்தொடர்ந்து,  நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக்குழு தேனி மலைப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டன. அதையடுத்து, இந்த திட்டத்தால் கதிர்வீச்சு அபாயம் இருக்காது என்றும், ஆய்வக பணியை மேற்கொள்ளலாம் என்றும், இதுகுறித்து அந்த பகுதி மக்களின் கருத்துக்களை கேட்க தேவையில்லை என்றும் பரிந்துரைத்துள்ளது.

இது அந்த பகுதி மக்களிடையே  கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், நேற்று டில்லியில் பேசிய அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை, நியூட்ரினோ திட்டத்துக்கு அதிமுக அனுமதி அளிககாது… அதை எதிர்க்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article