சென்னை:

த்திய சுற்றுலா துறையின், இன்கிரிடிபிள் இந்தியா, தமிழக சுற்றுலாத்துறை, மதுரா டிராவல்ஸ் ஆகியவை இணைந்து, மூன்றாவது தமிழ்நாடு சுற்றுலா விருது வழங்கும் விழாவை சென்னை, காமராஜர் அரங்கில் நேற்று (14.02.2018 – புதன்கிழமை) பிரம்மாண்டமாக நடத்தின.

இவ்விழாவில் தேசிய மாநில அளவில், சுற்றுலாத்துறைக்கு சேவையாற்றியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்கு பாடுபட்ட நிறுவனங்கள், சாதனையாளர்களுக்கு சிறந்த 5 நட்சத்திர ஓட்டல், சிறந்த பயணமுகவர், சிறந்த உணவகம், சிறந்த விமான சேவை, சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சிறந்த அந்நியநாட்டு பணம் மாற்றுனர், சிறந்த சுற்றுலா தொலைக்காட்சி நிகழ்ச்சி, மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படது.

சுற்றுலாத்துறைக்காக தமிழ்நாட்டில் வழங்கப்படும் ஒரே விருது இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரா டிராவல்  மற்றும் மதுரா வெல்கம் இதழ் நிர்வாக இயக்குநர் வி.கே.டி. பாலன்  தலைமை வகித்தார். சுற்றுலா பயணத்துறையில் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக சேவை செய்து வரும். மதுரா டிராவல் சர்வீஸ் 18 ஆண்டுகாலத்திற்கும் மேலாக வெளியிட்டு வரும் இதழ் “மதுரா வெல்கம்” ஆகும். தமிழகத்தின் முதன்மை சுற்றுலா இந்த இதழின் சார்பாக, இந்திய அரசின் சுற்றுலா துறை மற்றும் மாநில அரசு சுற்றுலா துறைகளின் ஆதரவுடனும் தேசிய அளவிலான சுற்றுலா சங்கங்களின் ஒத்துழைப்புடனும் இவ்விழா நடைபெற்றது.

இந்த விழா 3 வது ஆண்டாக மார்ச் 14 ஆம் தேதி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பல்லாயிரக்கனக்காணோர் மத்தியில் பிரமாண்டமாக நடைபெற்றது. கடந்த இரு விழாக்களும் 3 மணி நேரம் நடைபெற்ற நிலையில் இந்த மூன்றாவது விழா காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 12 மணி நேரம் கோலாகலமாக நடைபெற்றது.

அரங்கின் வெளியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு கலைகளான சிலம்பாட்டம், பொம்மலாட்டம், காளியாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், கோலாட்டம், பாம்பாட்டம், பறையாட்டம், பொய்கால் குதிரை, புலியாட்டம், சதிராட்டம், தாரைதப்பட்டை, வீச்சருவாள்,, சுருள்வாள், கலைக்கூத்து, தெருக்கூத்து, தீப்பந்தம் மற்றும் நாதஸ்வர இசை, தவில் கச்சேரி நடைபெற்றது.  மண்டபத்தின் வெளிச்சுற்று அரங்கில், இந்திய மற்றும் வெளிநாட்டு மாநில சுற்றுலா தகவல் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

 

காலை நிகழ்வுகளாக உள் அரங்கில் சுற்றுலாத்துறை சார்ந்த சொற் பொழிவுகள், பட்டிமன்றம், கவனகம் அஷ்டாவதானம், யோகா மற்றும் “தமிழக சுற்றுலாவில் சவால்களும், வாய்ப்புகளும்” கலந்துரையாடல் நடைபெற்றது. மதியம் தமிழ்நாடு சுற்றுலா விருது 2018 விழா நடைபெற்றது.  மாலை நேரத்தில் தமிழகத்தின் பாரம்பரிய பண்பாட்டு நாட்டு புறக்கலைகள், நாடகம், ஆடல், பாடல், இடம் பெற்றது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஓவியக்கல்லூரி மாணவர்களுக்கு ஓவிய மற்றும் சிற்பப்போட்டி வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன. 

மனித நேய சேவைக்காக தம்மை அர்ப்பணித்து சேவையாற்றும் ஒருவருக்கு “மதுரா மாமனிதர் விருது” (ரொக்கம் ரூபாய் ஒரு லட்சம்) கடந்த 8 வருட காலமாக மதுரா நிறுவனம் வழங்கி வருகின்றது. இவ்வருடம் ஆயக்குடி ராமகிருஷ்ணன் தலைமையில் மதுரையைச் சேர்ந்த செல்வி. அமுதசாந்திக்கு இவ்விருதும், ரொக்க ரூ.1 லட்சமும் இவ்விழாவில் வழங்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பார்வையாளர்களிலிருந்து குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படும் 100 பேருக்கு விமான டிக்கட், நட்சத்திர ஓட்டலில் தங்குதல், உணவக கூப்பன்கள், மற்றும் பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. நட்சத்திர ஓட்டல்களில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினரும் நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்துக் கொள்ள மண்டபத்திற்கு வந்து போக கால் டாக்சிகள் கட்டணமின்றி இலவச சேவை அளித்தன.

நிகழ்ச்சியை அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் அமீது தொகுத்து வழங்கினார்.