சென்னை:
லக மகளிர் தினமான இன்று தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் தங்கள் குறிக்கோள்களை அடைவதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் மகளிர் மேம்பாடு, பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெறவுள்ளன. மகளிர் மேம்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க் கப்படுகிறது.