தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா… கோவையில் 1014 ஆக குறைந்தது…

Must read

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தொற்று பாதிப்பு அதிகம் இருந்த கோவையில் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இன்று  1014 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில்வ மேலும் 8,183 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்தஎண்ணிக்கை 24,14,680 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 180 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 70 பேர் தனியார் மருத்துவமனைகளிலும்,  110 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 31,015 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 18,232 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 23,04,885 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 78,780ஆக  குறைந்துள்ளது. அதுபோல  சென்னை, கோவையில் பாதிப்பு சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலே தமிழகத்திலேயே அதிக பாதிப்பு கொண்ட கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1014ஆக குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 468 பேருக்கு மட்டும் புதிதாக கொரோனா உறுதியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 933 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

 

More articles

Latest article