சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக கோவையில்,  1014 பேருக்கும், சென்னையில் 468 பேருக்கும்   தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  24,14,680 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 31,015 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில்,  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கையும்  23,04,885 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 78,780ஆக  குறைந்துள்ளது. அதுபோல  சென்னை, கோவையில் பாதிப்பு சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலே தமிழகத்திலேயே அதிக பாதிப்பு கொண்ட கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1014ஆக குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 468 பேருக்கு மட்டும் புதிதாக கொரோனா உறுதியாகி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 52,87,68 ஆக உயர்ந்துள்ளது.  இன்று மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8032 ஆக அதிகரித்து உள்ளது. இன்று தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் 1513 ஆக உள்ளது. இதுவரை 51,84,74 பேர் குணமடைந்துள்ள நிலையில, தற்போதைய நிலையில், 2262  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

அரியலூர் 91
செங்கல்பட்டு 334
சென்னை 468
கோவை 1,014
கடலூர் 211
தர்மபுரி 122
திண்டுக்கல் 96
ஈரோடு  933
கள்ளக்குறிச்சி 173
காஞ்சிபுரம் 128
கன்னியாகுமரி 150
கரூர் 113
கிருஷ்ணகிரி 178
மதுரை 145
நாகப்பட்டினம் 157
நாமக்கல் 328
நீலகிரி 140
பெரம்பலூர் 59
புதுக்கோட்டை 80
ராமநாதபுரம் 63
ராணிப்பேட்டை 158
சேலம் 533
சிவகங்கை 76
தென்காசி 71
தஞ்சாவூர் 361
தேனி 123
திருப்பத்தூர் 87
திருவள்ளூர் 207
திருவண்ணாமலை 172
திருவாரூர் 127
தூத்துக்குடி 131
திருநெல்வேலி 66
திருப்பூர் 489
திருச்சி 242
வேலூர் 90
விழுப்புரம் 148
விருதுநகர் 119