சசிகலாவை ஆதரித்தவர்களை தமிழக மக்கள் புறக்கணிக்கவேண்டும்: தமிழிசை சவுந்திரராஜன்

Must read

சென்னை:

சிகலாவை ஆதரித்தவர்களை தமிழக மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு உச்சநீதி மன்றம் தண்டனையை உறுதி செய்தது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், கூவத்தூரில் அடைக்கப்பட்டிருக்கும் அதிமுக எம் எல் ஏக்களை சுதந்திரமாக செயல்பட விடவேண்டும். அவர்கள் மாறுவேடத்தில் தப்பிவரவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக கூறினார்.  சசிகலாவை ஆதரித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரை தமிழக மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக காலூன்ற தொடங்கிவிட்டதை மக்கள் உணர்ந்துவிட்டதாக தமிழிசை தெரிவித்தார்.

More articles

Latest article