சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவைகுற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்து தண்டனை அளித்துள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “உச்சநீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பை ஏற்கிறோம். சசிகலா, அஇஅதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பதால் முக்கியமான சில கட்சிப் பணிகள் இருக்கின்றன. அவை குறித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

மேலும் சசிகலாவுக்கு தற்போது ம். உடல்நிலை சரியில்லை. ஆகவே, உடல் பரிசோதனை செய்யவேண்டும். அதனால்,  நீதிமன்றத்தில் சரணடைய நான்கு வார கால அவகாசம் அளிக்க வேண்டும்”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, இதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.   இந்த மனு பிற்பகல்   விசாரணைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.