ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய இளைஞர் ஆணவக்கொலை… திருவண்ணாமலையில் பயங்கரம்…

Must read

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே மற்றொரு சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்தவர், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நிலையில், பெண்ணின் உறவினர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் மொரப்பன் தங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 24) இவருக்கும், வாலாஜா பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் வெவ்வெறு ஜாதி. இதனால் இளம்பெண் வீட்டார், சுதாகருக்கு கட்டிக்கொடுக்க மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

ஆனால் காதலர்கள்   கடந்த 6 மாதங்களுக்கு  வாலாஜா நகரில் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் மாநில வகைப்பாடு பட்டியலால் மிகவும் பின்தங்கிய சாதி (எம்பிசி) என வகைப்படுத்தப்பட்ட குழுக்களில் சேர்ந்தவர்கள் என்றாலும், சுதாகரின் சாதி எம்பிசி குழுக்களில் மிகக் குறைவானதாகக் கருதப்பட்டது.

இதனால், பெண்ணின் வீட்டார் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி,  திருமணத்தை ரத்து செய்து, இளம் தம்பதியினரை  வலுக்கட்டாயமாகப் பிரித்தது. இதையடுத்து சுதாகர் துன்புறுத்தப்பட்டு கிராமத்திலிருந்து விரட்டப்பட்டார். அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிராமத்தில் சிறுபான்மையினராக இருந்ததால், உள்ளூர் பஞ்சாயத்து தீர்ப்பை கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்தவர்.

இதைத்தொடர்ந்து, சுதாகரின் உயிரிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதி, அவரை  சென்னைக்கு அனுப்பினர்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, சென்னையில் வசித்து வந்த சுதார் சொந்த ஊருக்கு திரும்பினார். அதையடுத்து,  தனது மனைவியைச் சந்திக்க முயற்சி செய்தார்.  இது பெண்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை கோபப்படுத்தியது.

அதைத்தொடர்ந்து சுதாகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். மார்ச் 27 அன்று சுதாகர் தனது கிராமத்தில் தனியாக இருந்தபோது, ​​அந்தப் பெண்ணின் தந்தை, உறவினருடன் சேர்ந்து அவரைத் தாக்கி கொலை செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊரடங்குக்கு மத்தியில், இந்த ஆணவக்கொலை நடைபெற்றுள்ளது  கடுமையான பிரச்சினையை எழுப்பி உள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட தீண்டாமை ஒழிப்புக் குழுவினர் காவல்துறையினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆணவக் கொலை சம்பந்தமாக  அந்த பெண்ணின் தந்தையும் உறவினரும் ஆரணி  டவுன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

More articles

Latest article