சென்னை: தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி படத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் சென்னை வந்தடைந்தார்.

தமிழ்கத்தில் 5 நாட்கள் முகாமிடும் குடியரசுத்தலைவர் இன்று மாலை தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி படத் திறப்பு விழாவில் பங்கேற்று விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். இதையடுத்து,  சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் திங்கள்கிழமை இன்று  காலை 10 மணியளவில் புறப்பட்ட ராம்நாத் கோவிந்த் பிற்பகல் 12.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், உயர்அதிகாரிகள் வரவேற்றனர்.

இதையடுத்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற குடியரசுத்தலைவர்,  அங்கு சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மாலை 4.35 மணிக்கு ஆளுநா் மாளிகையிலிருந்து புறப்பட்டு சட்டப் பேரவைக்கு வரும் குடியரசுத் தலைவா், மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் பேரவை நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத் திறப்பு விழாவில் பங்கேற்கிறாா்.‘

சட்டமன்றம் வரும் குடியரசுத்தலைவர் சட்டப்பேரவைத் தலைவா் சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்புரை ஆற்றுகிறாா். ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்குகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்க உள்ளாா்.

சட்டப்பேரவையில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்து வைத்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறாா். மேலும், ஆளுநா், முதல்வா் ஆகியோரும் உரையாற்றுகின்றனா். விழாவின் நிறைவாக, பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி நன்றி கூறுகிறாா்.

சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு மாலை 6.15 மணிக்கு ஆளுநா் மாளிகைக்குச் செல்லும், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், செவ்வாய்க்கிழமை (ஆக.3) காலை சென்னையிலிருந்து புறப்பட்டு கோவை சென்று அங்கிருந்து உதகமண்டலம் செல்ல உள்ளாா்.

சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு: அதிமுக புறக்கணிப்பதாக அறிவிப்பு…