தூத்துக்குடி: மத்திய அரசின் திட்டங்களால், தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி அடைந்திருப்பதாக  குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஆனால், தமிழ்நாடு அரசு மத்திய அரசின் திட்டங்களை மறைத்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடி  இன்று தூத்துக்குடியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டியதுடன், ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளைதொடங்கி வைத்தார்.

அதன்படி, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7,055.95 கோடி மதிப்பில் வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கும் திட்டம், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் . இராமேஸ்வரம் பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட தூக்கு பாலத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர், குலசேகரப்பட்டினம் இஸ்ரோ விண்வெளி ஏவு தளத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இப்பகுதியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது. குலசேகரப்பட்டினம், அமலாபுரம், எள்ளுவிளை, கூடல் நகர், அழகப்பபுரம், உள்ளிட்ட பல கிராமங்களில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தன.

இந்தியாவின் முதல் உள்நாட்டு பசுமை ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்க கூடிய உள்நாட்டு நீர்வழி கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதற்கான எரிபொருள் மையம் ரூ.1950 கோடி மதிப்பில் முதன்முதலில் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் உருவாகிறது. ரூ.265.15 கோடி மதிப்பில் தூத்துக்குடி மூன்றாவது வடக்கு நிலக்கரி தளத்தை இயந்திர மயமாக்கப்படுகிறது.

தூத்துக்குடி துறைமுகத்தில் 124.32 கோடி ரூபாய் மதிப்பில் தினமும் 5 மில்லியன் லிட்டர் அளவுக்கு கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் அமைகிறது. தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் பணிகள் ரூ.4,586 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது.

இரயில்வே திட்டப் பணிகள் ரூ.1477 கோடி மதிப்பில் நடக்க உள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத்தலமாக்கும் பணிகளையும் மோடி தொடங்கி வைத்தார்.

பின்னர்,. நிகழ்ச்சியில் பேசிய  பிரதமர்,   வளர்ச்சி குறித்த என கோட்பாட்டை செய்தியாக வெளிவர தமிழக அரசு விடுவதில்லை. அதாவது, வளர்ச்சி குறித்த எனது கோட்பாடுகள், செய்தித் தாள்களில் செய்தியாக வெளிவரவிடாமல் தமிழக அரசு தடுக்கிறது. எனது கோட்பாடுகள் அனைத்தும் கட்சிக் கோட்பாடுகள் அல்ல. நாட்டின் வளர்ச்சிக்கோட்பாடு கள்தான் என்று கூறினார்.

மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறிய பிரதமர்,   ஆனால், தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் திட்டங்கள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. தடைகளை எல்லாம் தாண்டி தமிழ்நாட்டின் வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தியே தீருவோம் .

மக்களின் சேவகனாக இருந்து, நான் உங்களின் தேவைகளை விருப்பங்களை நிறைவேற்றுவேன். மத்திய அரசு திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் சாலை வழி இணைப்புகள் சிறப்பாக மாறியுள்ளது. தமிநாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகள் அதிகரித்திருக்கிறது என்றார்.

ஹைட்ரஜன் படகு காசியின் கங்கை ஆற்றில் தன் பயணத்தை தொடங்கவிருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் நல்ல உறவு மேலும் உறுதியாகிவிருக்கிறது. என்னுடைய தொகுதியாக இருக்கும் காசிக்கு தமிழ்நாடு மக்கள் அளிக்கும் நான்கொடை இதுவாகும் , நாடு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்தை நோக்கி பயணித்து வருகிறது என்று கூறியவர், வரும் காலத்தில் தமிழ்நாடு மிக வேகமாக வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது.* 3வது முறை மத்தியில் ஆளுகின்ற வாய்ப்பு கிடைக்கும்போது இந்த பணிகள் தொடரும்.  தமிழ்நாட்டு மக்களுக்கு இது மோடியின் உத்தரவாதம் என்றவர், தமிழகத்தின் பல பகுதிகளுக்கு நான் சென்று வந்தேன். தமிழர்களின் அன்பை பார்த்தேன். இதை நான் வீணடிக்க மாட்டேன். தமிழகத்தின் வளர்ச்சிக்காக நிச்சயம் பாடுபடுவேன். இன்று இந்த நேரம் வளர்ச்சியின் நேரமாகும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் இயக்கத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். தொடர்ந்து மதுரையில் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இதையடுத்து இன்று தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியது, தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன. தமிழகம் வரும்போதெல்லாம் தமிழர்கள் என் மீது பாசத்தைப் பொழிந்தார்கள். தமிழகத்தில் கிடைத்துள்ள அன்பைப் போலவே தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களும் என் மீது அன்பைப் பொழிகின்றனர். தமிழர்கள் என் மீது காட்டிய அன்பைப் பலமடங்காகத் திருப்பித்தருவேன். மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் என  தெரிவித்துள்ளார்.

குலசை ராக்கெட் ஏவுதளம், பசுமை ஹைட்ரஜன் கப்பல் உள்பட ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி