சென்னை: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சிபாலியல் சம்பவம் நடைபெற்றது போன்று  விருதுநகரில் இரு திமுக இளைஞர் அணி நிர்வாகி கள் உள்பட 8 பேர் சேர்ந்து இளம்பெண்ணை வீடியோ எடுத்து தொடர் பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதை சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் தாயாருடன் வசித்து வரும் 22 வயது இளம்பெண்ணுக்கு அதேபகுதியை சேர்ந்த திமுக இளைஞர் அணி ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தஇளம்பெண்ணை காதலிப்பதாக கூறி உடலுறவு கொண்டுள்ளார். இதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். பின்னர் இதைக்கொண்டு தனது நண்பரான மற்றொரு திமுக இளைஞர் அணி நிர்வாகி மற்றும் 4 சிறுவர்கள் உள்பட பலரிடம் வீடியோவை பகிர்ந்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் வீடியோவை காட்டி மிரட்டி கடந்த இரு மாதமாக பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளனர்.

இந்த சம்பவம், ஏற்கனவே குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி சம்பவத்தை நினைவுபடுத்துவதாக  அமைந்துள்ளது. இதில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் 2 பேர் முக்கிய காரணமாக இருந்துள்ளதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிகழ்வு கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

‘இந்த சம்பவம் தொடர்பாக திமுக நிர்வாகியான ஹரிஹரன், ஜுனைத் அகமது.  மாடசாமி ,பிரவீன், மற்றும் 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியர்வர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற நான்கு பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதால் ராமநாதபுரம் அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, இந்த பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து அதிக பட்ச தண்டனை பெற்று தர வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் எதிரொலித்து. இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புகாரைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர் என்றவர், விருதுநகர் பாலியல் வன்புணர்வு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவதாகவும் அறிவித்தார். இந்த வழக்கில் நீதி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல இல்லாமல், தற்போதைய ஆட்சியில் பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு எவ்வாறு தண்டனை பெற்று தருவோம் என்பதை அனைவரும் பாருங்கள் என்று சட்டப்பேரவையில் சூளுரைத்த முதலமைச்சர் விருதுநகர் பாலியல் விவகாரத்தில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றவர்,  பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல் இல்லாமல், இந்த வழக்கு வேகப்படுத்தப்படும். தவறிழைப்போருக்கு பாடமாகவும், விரைந்து தண்டனை பெற்றுத்தருவதில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்மாதிரியாகவும் இந்த வழக்கு இருக்கப்போகிறது என்றார்.

22வயது தலித்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 2திமுக இளைஞர்அணி நிர்வாகி, 4 மைனர் பையன் உள்பட 8 பேர் கைது! இது விருதுநகர் கொடூரம்….

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சிறுமிகள் மீதான பாலியல் சேட்டைகள்! ஆசிரியர்கள் கைது…