மாநில அரசின் அனுமதியின்றி நிலக்கரி சுரங்கம் அமைக்க முடியாது. இதுகுறித்து நாளை சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 கிராமங்களில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக 66 இடங்களின் ஆழ்துளையிட்டு கனிமவளம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

இந்த ஆரம்பகட்ட ஆய்வில் கனிமவளம் இருப்பது தெரியவந்தால் நிலக்கரி சுரங்கம் அமைக்கத் தேவையான நிலத்தை மாநில அரசு அனுமதியுடன் கையகப்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும்.

மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ள இந்த பகுதி தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2020 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநில அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே அங்கு சுரங்கம் அமைக்க முடியும். புதிய நிலக்கரி சுரங்கத் திட்டம் குறித்து விவசாயிகள் கவலை அடைய வேண்டாம் என்றும் இதுகுறித்து நாளை சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டம்