சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் வங்கியில் தமிழ்நாடு அரசு சார்பில் வைப்பீடு தொகை டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, ரூ.429,47  கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த 2021ம் ஆண்டு, கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வங்கி வைப்பு செலுத்தப்படும் என்றும், அந்த குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது அந்த பணம் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, கொரோனாவால் தாய் மற்றும் தந்தையைஇழந்த 382 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.19.01 கோடியும், கொரோனாவுக்கு தாய் அல்லது தந்தை என யாராவது ஒருவரை இழந்த 13,682 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.410.46 கோடியும் வங்கியுல் தமிழ்நாடு அரசு சாபில் பிக்சட் டெபாசிட் (வைப்பீடு) செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சமூக நலத்துறை தெரிவித்து உள்ளது.