சென்னை

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சுதந்திர போராட்ட தியாகிகளை ஜாதித்தலைவர்களாக சித்தரிப்பதாக கூறி உள்ளார்.

இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல் இந்திய சுதந்திரப் போர் பிரகடனம் என்று சொல்லப்படும் ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் மற்றும் அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய ஆய்வுகள் நடத்தியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழைல் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த அறியப்படாதவர்கள் பற்றிய 89 புத்தகங்களை ஆய்வு செய்து எழுதிய 88 பேர் மற்றும் அவர்களின் வழிகாட்டிகள் நேரில் வந்தனர்.

விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மருது சகோதரர்கள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்  மேலு,

நிகழ்ச்சி மேடையில் அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

ஆளுநர் தனது உரையில்.

“என் தாழ்மையான அஞ்சலியை மருது சகோதரர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். ஜம்பு தீவு பிரகடனம் ஆட்சியாளர்களுக்காக அல்ல. அனைத்து வகையான மக்களுக்காக கொண்டு வரப்பட்டது. நாயக்கர்கள், சுவேதார்கள் என ஐரோப்பிய படையில் தமிழர்கள் இருந்தார்கள். இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக யாரெல்லாம் தன் வாழ்வை அளித்து உள்ளார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இடம் ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களை கொண்டது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அளவில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளார்கள். 5000 போராளிகள் இந்த இடத்தில் இருந்து நேதாஜி உடன் போராட வந்தார்கள்.  செந்தில் குமார் எழுதிய Battle of panjaalanguruchi புத்தகம் சிறப்பாக இருந்தது. அதை நான் பலருக்கும் படிக்க சொல்லி அறிவுறுத்தி உள்ளேன். அந்த புத்தகம் மூலம் பலவற்றை அறிந்து கொண்டேன்.

பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு முதலில் அறியப்படாத 100 சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி ஆராய வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் பெரிதளவில் தங்கள் பங்கை அளித்துள்ளார்கள். அதற்கு, மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் முன் வந்து மிக சிறப்பாக சேவையை செய்துள்ளார்கள். இந்த எண்ணம் தொடர வேண்டும்.

சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த வீரர்களின் வேர்வையாலும், இரத்தத்தாலும் தான் நாம் இப்போது நன்கு சந்தோசமாக வாழ்கிறோம். ஜம்பு தீவு பிரகடனத்தை வெளியிட்ட இன்றைய தினத்தில் இந்த ஆவண படங்கள் வெளியிடு என்பது மிக முக்கியமான சிறப்பானதாக அமைந்துள்ளது. இதை விட சிறப்பான நாள் அமையாது.  எண்ணிக்கையற்ற அளவிலான மக்கள் அவர்கள் வாழ்வை சுதந்திரம் பெற்று தருவதற்காக இழந்துள்ளார்கள்.

பிரிட்டிஷ் அரசு எவ்வளவு கொடூரமானது என்றால் பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கொல்லப்பட்ட பின் அந்த நகரத்தை மொத்தமாக அழித்து அங்கு ஆண்டுக்கணக்கில் எதுவும் வளராத வகையில் உப்பை கொட்டினர். தேசிய கல்லூரிக்கு கடந்தாண்டு மருது சகோதரர்கள் தினத்தில் சென்ற பொழுது மாணவர்கள் மலர் மரியாதை செய்தனர். சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் கல்லறைகளில் வெறும் பூக்கள் வைப்பதால் ஒன்றும் இல்லை. சுதந்திர போராட்ட தியாகிகள் ஜாதி தலைவர்காளகவே சித்தரிக்கப்படுகிறார்கள்”

என்று தெரிவித்துள்ளார்.