சென்னை: சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு செய்து,  தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழநாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியான உடன், கல்லூரிகளுக்கான விண்ணப்பம் தொடங்கியது. ஆனால்,. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் நாளையுடன் (19ந்தேதி)நிறைவடைய இருந்த நிலையில், தற்போது மேலும் அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து, 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம்

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு கடந்த 20-ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 1,76,155 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில்,  பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பொறியியல் படிப்புக்கு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.