சென்னை: திமுக ஆட்சியில் அமர்ந்ததால் தான் ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட முடிந்தது என தமிழ்நாடு திருநாள் விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாட்டில் ஜூலை 18ந்தேதி தமிழ்நாடு நாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகஅரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் ‘தமிழ்நாடு நாள்’ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது,  தமிழ்நாடு நாள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களை பாராட்டுகிறேன். தமிழ்நாடு நாள் என சொல்லும் போதே, உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. தமிழ்நாடு நாள் விழாவில் நேரில் வந்து பங்கேற்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாடு என்ற பெயர் சாதாரணமாக கிடைத்ததல்ல. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் கிடைத்தது . , திமுக ஆட்சிக்கு அமர்ந்த பின் தான் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது, இல்லாவிடில் உ.பி, ம.பி என்பது போல தமிழ்நாடும் இன்று சென்னை பிரதேசம் என்றே அடையாள படுத்தபட்டிருக்கும்.

உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ள இனம் தமிழ் இனம். தாழ்ந்துகிடந்த தமிழகத்தை தலைநிமிர்ச் செய்த நாள்தான் ஜூலை18. தமிழ்நாடு நாள் என்று சொல்லும்போதே என் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது

உலகில் முதலில் பிறந்த குரங்கு தமிழ் குரங்கு தான். நம்மை சிலர் கிண்டல் செய்கிறார்கள். நாம் எத்தனை சொன்னாலும் ஆய்வு மூலம் தான் சொல்கிறோம். எதையும் கற்பனை மூலம் சொல்லவில்லை. அவமானம் துடைக்கபட்ட நாள் மற்றும் தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை தலை நிமிர செய்த நாள் இந்த ஜூலை 18 தான்.

எந்த விழாவாக இருந்தாலும் தமிழ்நாடு திருநாள் என்ற விழாவுக்கு ஈடு இணை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைவாணர் அரங்குக்கே நேரடியாக வந்து விழாவில் பங்கேற்க முடியவில்லை என்பதே எனது வருத்தம். கொரோனா தொற்று முழுமையாக நீங்கிவிட்டது  ஆலோசனைப்படி ஓய்வு எடுத்து வருகிறேன் என தெரிவித்தார்.