மின்னணு மற்றும் மின்னணு உற்பத்தி சேவை துறைக்கான வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்திய அரசு கவனம் செலுத்திவரும் நிலையில், மின்னணு உற்பத்தி சேவைகளுக்கான (EMS) முக்கிய மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது,

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள EMS நிறுவனங்கள் தமிழகத்தை முன்னணி மாநிலமாக உயர்த்தியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் பொதுப் பங்குகள் மூலம் (ஐபிஓ) நிதி திரட்டமுயன்று வருவதே இதற்கு சான்றாக விளங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் பாரத் எஃப்ஐஎச் (ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் நிறுவனம்) சுமார் ₹5,003.8 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது; Avalon Technologies (₹1,025 கோடி) மற்றும் தற்போது சந்தையில் உள்ள Sryma SGS டெக்னாலஜி ₹825 கோடி திரட்ட உள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்திற்காக சுமார் 300 பில்லியன் டாலர்களை இந்திய அரசு ஒதுக்கியிருப்பதில் இருந்தே மின்னணு மற்றும் மின்னணு உற்பத்தி சேவைத் துறையின் வளர்ச்சி உணரப்படுவதாக ப்ராஸ்ட் அண்ட் சல்லிவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.