சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தை  இன்று தொடங்கி உள்ளார்.

தேசிய முன்போக்கு திராவிடர் கழகத்தின் கொடி நாள் விழா இன்று பிப்ரவரி 12 ம் தேதி தமிழகம் முழுவதும் அவரது கட்சியினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று கொடி நாள்நிகழ்வை விருங்கப்பாக்கம் இருக்கக்கூடிய விஜயகாந்த்  இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த் கொடி ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, விருகம் பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திலிருந்து தேமுதிக அலுவலகத்திற்கு பரப்புரை வாகனத்தில் விஜயகாந்த் பயணம் செய்தார்.

வரும் வழியில், ஆங்காங்கே தேமுதிக கொடியை வாகனத்தில் இருந்தபடியே கொடி கயிரை பிடிக்க பிரேமலதா  கொடி ஏற்றினார். பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்துக்கு வந்ததும், அங்கும் கொடி ஏற்றப்பட்டது.

இதையடுத்து தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த், கொடிநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்துடன், இதையடுத்து இரண்டு குழந்தைகளுக்கு பெயர்சூட்டும் நிகழ்வு நடைபெற்றது. பெண் குழந்தைக்கு விஜயலதா என்று பெயர் சூட்டினார்.

இதைத்தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமை அலுவலகத்தில் ஆலோசிக்கப்படும்  என்றும், தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வரும். அதிமுகவாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும்.

கூட்டணி குறித்து இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள். அதிமுகவிடம் கேளுங்கள் என்று கூறியவர், இனிமேல் தொகைக்காட்சி விவாதங்களில் தேமுதிகவினர்  பங்கேற்பார்கள் என்றார்.

விஜயகாந்த் உத்தரவிட்டால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறிய பிரேமலதா,  தமிழகம் முழுவதும் விஜயகாந்த்  பிரச்சார பயணத்தை மேற்கொண்டு தொண்டர்களை சந்திப்பார் என்றும் தெரிவித்தார்.

தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், பிரேமலதா தரப்பில் , சிலர் சசிகலாவை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில், முழுமையாக உடல்நலம்  குணமடையாமலும், இயல்பாக பேச முடியாத நிலையிலேயே தேர்தல் பிரசாரத்துக்கு களமிறக்கப்பட்டு  இருக்கிறார் என்பது  இன்றைய நிகழ்வு மூலம் தெரிய வந்துள்ளது. அரசியல் பேரத்துக்காக விஜயகாந்தை பிரேமலதா,  களமிறக்கி இருக்கிறார் என சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.